ஹோம் /நியூஸ் /உலகம் /

176 பேர் உயிரிழந்த விமான விபத்து - தாக்குதலை ஒப்புக்கொண்ட ஈரான்

176 பேர் உயிரிழந்த விமான விபத்து - தாக்குதலை ஒப்புக்கொண்ட ஈரான்

நொறுங்கிக்கிடந்த விமான பாகம்

நொறுங்கிக்கிடந்த விமான பாகம்

  • News18
  • 1 minute read
  • Last Updated :

    176 பேர் பயணித்த உக்ரைன் நாட்டு விமானத்தை சுட்டுவீழ்த்தியது நாங்களே என்று ஈரான் அறிவித்துள்ளது. தொழில்நுட்ப கோளாறால் தாக்குதல் நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கடந்த 8-ம் தேதி புறப்பட்டு சென்ற உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான போயிஸ் ரக விமானம் சில நிமிடங்களில் லாஜ் அபத் என்ற பகுதியில் உள்ள விவசாய இடத்தில் விழுந்து நொறுங்கியது. விமானம் தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணம் செய்த 176 பேரும் பலியானார்கள்.

    ஈரானியர்கள் 82 பேரும், கனடாவை சேர்ந்த 63 பேரும், உக்ரைனை சேர்ந்த 11 பேரும், சுவீடனை சேர்ந்த 10 பேரும், ஆப்கானிஸ்தானை சேர்ந்த 4 பேரும், ஜெர்மனி, இங்கிலாந்தை சேர்ந்த தலா 3 பேரும் உயிரிழந்தனர். இதில் 15 சிறுவர்கள் அடங்குவர்.

    தொழில் நுட்ப கோளாறு காரணமாக விமான விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அமெரிக்கா- ஈரான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில் விமானம் விழுந்து நொறுங்கி உள்ளதால் சுட்டு வீழ்த்தப்பட்டது என்ற சந்தேகம் எழுந்தது. அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் ஈரான் மீது சந்தேகம் எழுப்பியிருந்தன.

    இந்த நிலையில், விமானத்தை ஏவுகணையால் தவறுதலாக சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அரசு ஒப்புக்கொண்டுள்ளது. அந்நாட்டு அரசு தொலைக்காட்சியில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

    மனித தவறு காரணமாக விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதாகவும், இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Published by:Sankar
    First published:

    Tags: Iran