Home /News /international /

உய்குர் முஸ்லீம்கள் விவகாரம் : சீனாவிற்கு ஐ.நா அமைப்பு கண்டனம்!

உய்குர் முஸ்லீம்கள் விவகாரம் : சீனாவிற்கு ஐ.நா அமைப்பு கண்டனம்!

உய்குர் முஸ்லீம்கள் போராட்டம்

உய்குர் முஸ்லீம்கள் போராட்டம்

ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் மிச்செல் பேச்லெட், தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு 13 நிமிடங்களுக்கு முன்பு அந்த அறிக்கையை வெளியிட்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • interna, Indiachina china
    உய்குர் முஸ்லீம்களுக்கு எதிராக சீனா செய்யும் அடக்குமுறை, மனித நேயத்திற்கு எதிரானது என ஐ.நா. மனித உரிமை அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

    துருக்கியை பூர்வீகமாக கொண்ட உய்குர் முஸ்லீம்கள், சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் பல நூற்றாண்டுகளாக வசித்து வருகின்றனர். அவர்கள் மீது கடந்த 50 ஆண்டுகளாக கடும் அடக்குமுறையை சீனா ஏவி வருவதாக அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. இதையடுத்து, ஜின்ஜியாங் மாகாணத்தில் ஐ.நா. மனித உரிமை அமைப்பு கள ஆய்வு செய்ததது. அந்த ஆய்வு தொடர்பான அறிக்கையை வெளியிடக் கூடாது என சீனா அழுத்தம் கொடுத்துள்ளது.

    இதையும் வாசிக்க: ரஷ்ய போருக்கு பதிலடியாக சோவியத் நினைவு சின்னத்தை இடித்த லாத்வியா

    இந்நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் மிச்செல் பேச்லெட், தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு 13 நிமிடங்களுக்கு முன்பு அந்த அறிக்கையை வெளியிட்டார். உய்குர் முஸ்லீம்களுக்கு எதிராக சீனா இயற்றியுள்ள சட்டதிட்டங்கள் மனித தன்மை அற்றவை என அவர் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சீனா, தங்களுக்கு எதிரான சக்திகளால் புனையப்பட்ட பொய் அறிக்கை எனக் கூறி அதை நிராகரித்துள்ளது.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: China, Human rights Council, United Nation

    அடுத்த செய்தி