பேரனுக்காக McDonald-ல் உணவு வாங்க சென்ற முதியவருக்கு ரூ.2 லட்சம் அபராதம்!

பேரனுக்காக McDonald-ல் உணவு வாங்க சென்ற முதியவருக்கு ரூ.2 லட்சம் அபராதம்!

பேரனுக்காக McDonald-ல் உணவு வாங்க சென்ற முதியவருக்கு அபராதம்

இங்கிலாந்தில் உள்ள ஒரு தாத்தாவைப் பொறுத்தவரை, மெக்டொனால்ட் விற்பனை நிலையத்திலிருந்து பெற்ற ஹாப்பி மீல் அவர் எதிர்பார்த்ததை விட மிகவும் விலை உயர்ந்ததாக முடிந்தது.

  • News18
  • Last Updated :
  • Share this:
McDonald உணவு என்றாலே அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் மிகவும் பிரபலமானவை. அவர்களை பொறுத்தவரை மெக்டொனால்ட் உணவு பொதுவாக ஒரு மகிழ்ச்சியான உணவாகும். இதற்காக மக்கள் வெகு தூரம் சென்று உணவுகளை வாங்குவது வழக்கம். ஆனால் இங்கிலாந்தில் உள்ள ஒரு தாத்தாவைப் பொறுத்தவரை, மெக்டொனால்ட் விற்பனை நிலையத்திலிருந்து பெற்ற ஹாப்பி மீல் அவர் எதிர்பார்த்ததை விட மிகவும் விலை உயர்ந்ததாக முடிந்தது. சமீபத்தில் அவர் தனது பேரனை மெக்டொனால்டு உணவகத்திற்கு நேரடியாக காரில் அழைத்து சென்றுள்ளார். மேலும் காரை நீண்ட நேரம் பார்க்கிங் செய்ததால் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் லூட்டனில் வசிக்கும் ஜான் பாபேஜ் என்பவர், தனது பேரன் டைலரை உள்ளூர் விற்பனை நிலையத்திற்கு அழைத்துச் சென்று மெக்டொனால்ட்சில் இருந்து 2.79 டாலர்கள் (அதாவது ரூ .200) மதிப்புள்ள "ஹாப்பி மீல்" உணவை வாங்கினார். ஆனால் பாபேஜின் சிறிய பேரன் மீது காட்டிய அன்பு அவரை 2,000 டாலர்கள் (அதாவது ரூ .2 லட்சம்) பார்க்கிங் அபராதம் கட்ட வைத்தது. ஏனெனில் இருவரும் உணவு சாப்பிட்ட பிறகு, அருகில் இருந்த பூங்காவில் தனது பேரனை விளையாட அனுமதித்துள்ளார்.

75 வயதான பேபேஜ் தனது பேரன் அவனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது தனது காரில் காத்திருந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாது அந்த நேரத்தில் முதியவர் காரில் படுத்து உறங்கியுள்ளார். விவசாயியான அவர் காருக்குள் தூங்கிக் கொண்டிருந்த போது, அவருக்கு கொடுக்கப்பட்ட 2 மணி நேர இலவச பார்க்கிங் நேரம் முடிந்ததை சரியாக கவனிக்கவில்லை. அனுமதித்த 2 மணி நேரம் முடிந்த பிறகும் சுமார் 17 நிமிடங்களுக்கு அவரது கார் பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தப்பட்டிருந்தது.

Also read... உலகின் 10 சிறந்த முதலீட்டாளர்கள் யாரெல்லாம் தெரியுமா?

இதன் காரணமாக கார் பார்க்கிங்கை நடத்தும் ஹைவியூ பார்க்கிங் என்ற நிறுவனத்தால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதோ £ 400 டாலர்கள் தான். இருப்பினும் அபராதம் குறித்த ரசீது முதியவர் இப்பொது வசிக்காத முகவரிக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இப்படியொரு அபராதம் விதிக்கப்பட்டது தனக்குத் தெரியாது என்று பாபேஜ் கூறியுள்ளார். ஆனால் கடன் வசூல் நிறுவனமான டி.சி.பி.எல் அதிகாரிகள் முதியவரின் வீட்டை கண்டுபிடித்து, 400 டாலர் அபராதமும் 1,651 டாலர் காஸ்ட்டும் (ரூ .2 லட்சம்) செலுத்துமாறு கேட்டுக்கொண்டது. இதனை கேட்ட பாபேஜும் அவரது மனைவி லிபியும் கடும் அதிர்ச்சியில் இருந்தனர்.

இதேபோன்ற மற்றொரு சம்பவத்தில், ஒரு இங்கிலாந்து நபர் ஜனவரி நடுப்பகுதியில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி லூட்டனில் இருந்து தேவிஜஸுக்கு சுமார் 160 கி.மீ பயணம் மேற்கொண்டுள்ளார். தனது சொந்த ஊரில் மெக்டொனால்டு விற்பனை நிலையம் இல்லாததால் அவ்வளவு தூரம் பயணித்தார். இந்த சம்பவம் குறித்து தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட வில்ட்ஷயர் பொலிசார், ஊரடங்கு விதிமுறைகளை அப்பட்டமாக மீறியதற்காக , அந்த நபருக்கு 200 டாலர் (ரூ .20,000) அபராதம் விதித்ததாகவும் கூறினார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: