முகப்பு /செய்தி /உலகம் / ஈரான் அணு ஆயுத விவகாரத்தில் தெளிவான முடிவு எட்டப்படவில்லை - ஐநா அதிருப்தி

ஈரான் அணு ஆயுத விவகாரத்தில் தெளிவான முடிவு எட்டப்படவில்லை - ஐநா அதிருப்தி

மாதிரி படம்

மாதிரி படம்

அணுசக்தியை முறையாக பயன்படுத்தாமல் போனதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து அமெரிக்காவின் வலியுறுத்தலால் ஈரானுடன் அணு சக்தி ஒப்பந்தத்தை சர்வதேச அணுசக்தி முகமை நிறுத்தி வைத்துள்ளது.

  • Last Updated :
  • intern, Indiairaniran

ஈரானில் அணு ஆயுதம் இருப்பு தொடர்பாக இதுவரை தெளிவான முடிவு எட்டப்படவில்லை என ஐநா கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

மின்சக்தி தயாரிப்பு உள்ளிட்ட ஆக்கப்பூர்வ பணிகளுக்காக வழங்கப்பட்ட அனுசக்தியை அனுமதியில்லாமல் ஆயுத தயாரிப்பிற்கு ஈரான் பயன்படுத்தியதாக சர்வதேச அனுசக்தி முகமை குற்றம் சாட்டியதோடு, ஈரானுக்கு அணுமூலப்பொருளை ஈரானுக்கு வழங்கவும் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டை ஈரான் மறுத்து வந்தாலும், பல ஆண்டுகளாக இந்த விவகாரம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அணு விவகாரத்திற்கான ஐநாவின் கண்காணிப்புக் குழு இது தொடர்பான சந்தேகங்களை தீர்க்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளது.

முதற்கட்டமாக ஈரானில் நேரில் ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக தெளிவான முடிவை எட்டுவதில் இன்னும் இழுபறி நீடிக்கிறது எனவும், முழுமையாக தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை எனவும் ஐநா கண்காணிப்புக் குழுவின் தலைவர் ரஃபேல் குரோஸி தெரிவித்துள்ளார்.

இந்த மாத முடிவுக்குள் ஈரானில் சக்தி நிபுணர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆய்வுகளின் போது அணுசக்தி மற்றும் ஆயுதங்கள் தொடர்பான முழுமையான தொழில்நுட்ப விளக்கங்களை ஈரான் அரசு தரும் என சர்வதேச அணுசக்தி முகமை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ALSO READ | தானிய ஏற்றுமதிக்கு தயாராகும் ரஷ்யா - ஐநா நம்பிக்கை

ஈரானுக்கு வழங்கப்பட்ட அணுசக்தி அழிவு சக்தியாக பயன்படுத்தப்படவில்லை என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்க வேண்டிய கட்டயாம் அணுசக்தி முகமைக்கு ஏற்பட்டுள்ளது எனவும் ஐநாவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஈரானில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 3,673.7 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியம், தற்போதைய நிலவரப்படி 267.2 கிலோவாக குறைந்தது எப்படி என்பது குறித்து ஈரான் அரசு முழுமையான மற்றும் நம்பகமான விளக்கத்தை தர வேண்டும் எனவும் ஐநா கண்காணிப்புக் குழு வலியுறுத்தி வருகிறது.

அணுசக்தியை முறையாக பயன்படுத்தாமல் போனதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து அமெரிக்காவின் வலியுறுத்தலால் ஈரானுடன் அணு சக்தி ஒப்பந்தத்தை சர்வதேச அணுசக்தி முகமை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் தொடர்ந்து ஈரானுக்கு யுரேனியம் விநியோகம் செய்யப்படுவது நிறுத்தப்பட்டது. அந்த ஒப்பந்தத்தை திரும்ப நடைமுறைப்படுத்த வேண்டும் என ஈரான் அரசு வலியுறுத்தி வரும் நிலையில், அணுசக்தி பயன்பாடு குறித்த சர்ச்சை மேலும் வலுவடைந்துள்ளது.

இதற்காக கடந்த ஆண்டு ஏப்ரல்  மாதம் முதல் சர்வதேச நாடுகளின் உதவியுடன் ஈரான் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனாலும் இந்த விவகாரத்தில் ஈரான் அரசு வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை என சர்வதேச அனுசக்தி முகமை தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

First published:

Tags: Nuclear, UN, UN council member