முகப்பு /செய்தி /உலகம் / உலக மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் பேர் இன்னும் இன்டர்நெட் பயன்படுத்தியதில்லை? ஐ.நா. வெளியிட்ட தகவல்

உலக மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் பேர் இன்னும் இன்டர்நெட் பயன்படுத்தியதில்லை? ஐ.நா. வெளியிட்ட தகவல்

கொரோனா நெருக்கடி ஏற்பட்ட முதல் ஆண்டில் உலகளாவிய இன்டர்நெட் யூஸர்களின் எண்ணிக்கை 10 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது.

கொரோனா நெருக்கடி ஏற்பட்ட முதல் ஆண்டில் உலகளாவிய இன்டர்நெட் யூஸர்களின் எண்ணிக்கை 10 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது.

கொரோனா நெருக்கடி ஏற்பட்ட முதல் ஆண்டில் உலகளாவிய இன்டர்நெட் யூஸர்களின் எண்ணிக்கை 10 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது.

  • Trending Desk
  • 1-MIN READ
  • Last Updated :

இன்றைய டிஜிட்டல் உலகை முழுவதுமாக ஆக்கிரமித்து வழிநடத்துவதில் இன்டர்நெட்டின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. நம்மால் ஒருநாள் கூட இன்டர்நெட்டை பயன்படுத்தாமல் இருக்க முடிவதில்லை. இதனிடையே உலகில் கிட்டத்தட்ட 3 பில்லியன் மக்கள் அதாவது உலக மக்கள் தொகையில் சுமார் 37% பேர் இன்னும் இன்டர்நெட்டையே பயன்படுத்தவில்லை என்ற தகவல் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த 20 மாதங்களாக உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க காரணமாக இருந்த போதிலும், இன்னும் சுமார் 3 பில்லியன் மக்களால் அதை பயன்படுத்த முடியவில்லை என்ற தகவல் ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு ஒன்றால் வெளியிடப்பட்டுள்ளது.

இதுவரை இன்டர்நெட்டை பயன்படுத்தாத அந்த 3 பில்லியன் மக்களில் சுமார் 96 சதவீதம் பேர் வளரும் நாடுகளில் வசிப்பதாக ஐநா-வின் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (UN’s International Telecommunication Union) மதிப்பிட்டுள்ளது. 2019-ல் இன்டர்நெட்டை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 4.1 பில்லியனாக இருந்த நிலையில், 2021-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 4.9 பில்லியனாக உயர்ந்துள்ளது என்று UN-ன் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் கூறி இருக்கிறது.

இந்த அதிகரிப்புக்கு கோவிட்-19 தொற்றும் ஒரு காரணமாக இருப்பதாகவும் கூறப்பட்டு உள்ளது. ஆனால் இந்த அதிகரித்துள்ள இன்டர்நெட் யூஸர்களிடையே கூட, பல நூறு மில்லியன் மக்கள் எப்போதாவது மட்டுமே ஆன்லைனில் செல்ல கூடிய பழக்கம் கொண்டவர்களாக, ஷேர்டு டிவைஸ் மூலம் இன்டர்நெட்டை பயன்படுத்துபவர்களாக அல்லது குறைந்த கனெக்ஷன் ஸ்பீட் உள்ளிட்டவற்றை எதிர்கொள்பவர்களாக இருக்கின்றனர், இவை அவர்களின் இன்டர்நெட் பயன்பாட்டை தடை செய்கிறது என்று கூறப்பட்டு உள்ளது.

Also Read | பச்சிளங் குழந்தைகளிடையே அதிகரிக்கும் நிமோனியா! விழிப்புணர்வு மூலம் தடுக்க முடியுமா? முதன்மை மருத்துவர் சொல்வது என்ன?- பகுதி 1

இது தவிர வறுமை, கல்வியறிவின்மை, வரையறுக்கப்பட்ட மின்சார அணுகல் மற்றும் டிஜிட்டல் திறன்களின் பற்றாக்குறை உள்ளிட்டவை பல லட்சக்கணக்கான மக்கள் இன்டர்நெட்டை பயன்படுத்த முடியாததற்கு காரணமாக மற்றும் சவாலாக இருப்பதாக ITU கூறியுள்ளது. இதனிடையே சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் (ITU) பொதுச்செயலாளர் பதவியில் இருக்கும் Houlin Zhao கூறுகையில், இதுவரை இன்டர்நெட்டை பயன்படுத்தாமல் இருக்கும் மீதமுள்ள 3 பில்லியன் மக்களை இணைக்கும் வகையில் இன்டர்நெட் இணைப்பிற்கான கட்டுமானத் தொகுதிகள் (building blocks) உள்ளனவா என்பதை உறுதிப்படுத்த ITU வேலை செய்யும். உலக மக்கள் அனைவரும் இன்டர்நெட்டை பயன்படுத்துகிறார்கள் என்பதை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்றார்.

கோவிட் நெருக்கடி ஏற்பட்ட முதல் ஆண்டில் உலகளாவிய இன்டர்நெட் யூஸர்களின் எண்ணிக்கை 10 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. இது 10 ஆண்டுகளில் காணப்பட்ட மிகப்பெரிய வருடாந்திர அதிகரிப்பாகும் என்று ITU சுட்டிக்காட்டி உள்ளது. இந்த உயர்வுக்கு முக்கிய காரணம் தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்ட லாக்டவுன்கள், பள்ளி மூடல்கள் மற்றும் ரிமோட் பேங்கிங் போன்ற சேவைகளை அணுக வேண்டியதற்காக ஏற்பட்ட அவசியம் போன்றவை என்பதையும் ITU ஒப்பு கொண்டுள்ளது.

ஆனால், ஏழை நாடுகளில் இன்டர்நெட் அணுகல் என்பது கட்டுப்படியாகாதது என்பதால் வளர்ச்சி சீரற்றதாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. குறைந்த வளர்ச்சியடைந்த 46 நாடுகளில் வசிக்கும் முக்கால்வாசி மக்கள் இதுவரை இன்டர்நெட்டை பயன்படுத்தாதவர்களாக இருக்கின்றனர் என்று ஐ.நா குறிப்பிட்டுள்ளது. வளரும் நாடுகளில் பாலின இடைவெளி அதிகமாக இருக்கிறது. மேலும் அந்நாடுகளில் வயதானவர்கள், பெண்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ளவர்களை விட இளைஞர்கள், ஆண்கள் மற்றும் நகர்ப்புறவாசிகள் இன்டர்நெட்டை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

First published:

Tags: Internet, News On Instagram, UNO