ஹோம் /நியூஸ் /உலகம் /

Stan Swamy | ஸ்டேன் சுவாமியின் மரணம் வேதனையளிக்கிறது - இந்தியாவுக்கு ஐ.நா சபை அறிவுரை

Stan Swamy | ஸ்டேன் சுவாமியின் மரணம் வேதனையளிக்கிறது - இந்தியாவுக்கு ஐ.நா சபை அறிவுரை

 பழங்குடி மக்களுக்காக போராடி வந்த சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி காலமானார்!

பழங்குடி மக்களுக்காக போராடி வந்த சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி காலமானார்!

ஸ்டேன் சுவாமியின் மறைவு வேதனையளிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து புள்ளம்பாடி அருகே உள்ள விரகாலூர் கிராமத்தில் வசித்தவர் லூர்துசாமி, கிப்பேரிம்மாள் இவர்களுக்கு மூன்று பெண் பிள்ளைகளும் 3 ஆண் பிள்ளைகளும் பிறந்தனர். இதில் ஐந்தாவதாக பிறந்தவர் ஸ்தனிஸ்லாஸ் லூர்துசாமி இவர் 1937 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி பிறந்தார். 1957ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் தேதி ஸ்தனிஸ்லாஸ் லூர்துசாமி துறவி யாராக ஆனார். பின்னர் 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி பாதிரியாராக பதவியேற்றார்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் பிஏ வரலாறு பட்டம் பெற்றார். பாதிரியார் படிப்பதற்காக 14 வருடம் திண்டுக்கல், மணிலா, பிலிப்பைன்ஸில் சென்றுள்ளார். இதன் பின்னர் 15 வருடம் பெங்களூர் சமூக கல்வி நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். அதன்பின்பு 36 வருடம் ஜார்கண்ட் மாநிலத்திற்கு சென்று பழங்குடி மக்களுக்காகப் போராடி உள்ளார்.

ஸ்தனிஸ்லாஸ் லூர்துசாமி தனது பெயரை ஸ்டேன் சுவாமி என சுருக்கிக் கொண்டு பழங்குடி மக்களுக்காகப் அவர்களின் உரிமையை பெற்றுத் தருவதற்காக போராடி உள்ளார்.

80க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார் மேலும் சுயசரிதை எழுதி முடிக்கும் முன்பு அக்டோபர் 8ஆம் தேதி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இரவில் தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்தனர். மகாராஷ்டிர மாநிலம் பீமா கோரேகான் வழக்கில் இவரது பெயர் சேர்க்கப்பட்டு ஊபா வழக்கில் கைது செய்யப்பட்டார்.

நடுக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்டேன் சுவாமி கை நடுக்கத்தால் தண்ணீர்கூட குடிக்க முடியவில்லை என்று கூறி தன்னிடமிருந்து கைப்பற்றிய உறிஞ்சுக் குழல் மற்றும் உறிஞ்சுக் குவளையை வழங்க என்.ஐ.ஏ.வுக்கு உத்திரவிட வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்தில் மனு செய்தார். ஆனால் என்.ஐ.ஏ., ஸ்டேன் சுவாமியிடமிருந்து உறிஞ்சு குழல் மற்றும் உறிஞ்சு குவளை எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று ஈவு இரக்கமின்றி நீதிமன்றத்தில் கூறியது. மும்பை சிறையில் கடந்த 10 மாதங்களாக அடைக்கப்பட்டிருந்த ஸ்டேன் சுவாமி உரிய மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கமால் கடுமையாக அவதிப்பட்டார். உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைப் பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். அவருடைய மறைவு தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அவருடைய மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டவர்களும் இரங்கல் மற்றும் கண்டனம் தெரிவித்திருந்தனர். தமிழ்நாட்டில் கனிமொழி, வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில், ஸ்டேன் சுவாமி மறைவுக்கு ஐக்கிய நாடுகள் சபை அதிருப்தி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஐ.நா சபை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘மிக நீண்ட விசாரணக் கைதியாக இருந்த 84 வயது மனித உரிமை ஆர்வலர் பாதிரியார் ஸ்டேன் சுவாமி மறைவு மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. எந்த அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் கைது செய்யப்பட்டுள்ளவர்களை கொரோனா காலத்தில் விடுதலை செய்யவேண்டும் மிக அவசரமான ஒன்று’ என்று குறிப்பிட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், பாதிரியார் ஸ்டேன் சுவாமியின், கருத்து சுதந்திரத்துக்கான தங்களது உரிமையை பயன்படுத்துவதற்காக, அமைதியான முறையில் ஒன்றாக கூடுவதற்காக கூடும் யாரும் கைது செய்யப்படக் கூடாது’ என்ற வாசகத்தையும் குறிப்பிட்டுள்ளது.

First published:

Tags: Stan Swamy