மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றி, ஆங் சான் சூகியை கைது செய்துள்ள நிலையில் அவரை விடுதலை செய்ய வேண்டும் என ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.
மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பரில் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
எனினும், தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகக்கூறிய அந்த நாட்டு ராணுவம், தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்து வந்தது. இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்று கூறி தேர்தல் ஆணையம் அதை நிராகரித்தது.
இதனைத் தொடர்ந்து, மியான்மர் அரசுக்கும் அந்த நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது, இந்நிலையில். ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி மற்றும், அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்களை கைது செய்த ராணுவம், அவர்களை சிறையில் அடைத்தது.
ஓர் ஆண்டு காலத்திற்கு மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெறும் என்றும் அதன் பிறகே தேர்தல் நடத்தப்பட்டு, வெற்றி பெறுபவர்களிடம் அதிகாரம் ஒப்படைக்கப்படும் என்றும் அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க.. எழுவர் விடுதலையில் குடியரசு தலைவருக்கு மட்டுமே அதிகாரம் - ஆளுநர் தரப்பு
மியான்மர் ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், ஆங் சான் சூகியை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.