ஹோம் /நியூஸ் /உலகம் /

உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவர முயற்சி… ஐ.நா. பொதுச் செயலாளர் ரஷ்யா பயணம்

உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவர முயற்சி… ஐ.நா. பொதுச் செயலாளர் ரஷ்யா பயணம்

ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்

ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்

Russia Ukraine War : உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடைபெற்றாலும் அதிகமான பாதிப்பு உக்ரைன் நாட்டிற்கு மட்டுமே ஏற்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையாக ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் ரஷ்யாவுக்கு வரும் 26ம் தேதி செல்கிறார். இந்த பயணத்தை முடித்துக் கொண்டு உக்ரைன் அதிபரை 28ம் தேதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24ம் தேதி போரை தொடங்கியது. இதன் விளைவாக உக்ரைனில் 50 லட்சத்திற்கும் அதிகமானோர் அகதிகளாக வெளியேறியுள்ளனர். ரஷ்யா முற்றுகையிட்டிருக்கும் மரியுபோல் நகரில் ஒரு லட்சம் பொதுமக்கள் சிக்கியுள்ளனர்.

போரை நிறுத்துவதற்கு உலக நாடுகள் பலவும் முயற்சி மேற்கொண்ட நிலையில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. இந்நிலையில் ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் ரஷ்யாவுக்கு சென்று சமாதான முயற்சியை மேற்கொள்ள உள்ளார்.

இதையும் படிங்க - இலங்கைக்கு உதவ முன்வந்த உலக வங்கி: பொருளாதார சிக்கலை தீர்க்க ரூ.4,500 கோடி வழங்க உள்ளது

26-ம்தேதி ரஷ்யாவுக்கு செல்லும் அவர் அங்கு அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதுவரையில் உலக நாடுகளின் தலைவர்கள் மட்டுமே புதினை சந்தித்து போரை நிறுத்துமாறு கூறியிருந்தனர். தற்போது ஐநா பொதுச் செயலாளரே நேரடியாக சமதான முயற்சியில் இறங்கியுள்ளார். இந்த பயணத்தை முடித்துக் கொண்டு 28-ம்தேதி உக்ரைனுக்கு செல்லும் ஐநா பொது செயலாளர் அங்கு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசிகிறார்.

இதையும் படிங்க - கொரோனாவுடன் அதிக நாள் போராட்டம் நடத்திய நபர் இவர் தான் - ஆய்வில் தகவல்

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடைபெற்றாலும் அதிகமான பாதிப்பு உக்ரைன் நாட்டிற்கு மட்டுமே ஏற்பட்டுள்ளது. உயிரிழப்புகளுடன் சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி உள்ளதால் உள் நாட்டு பிரச்னைகள் அதிகரித்துள்ளன.

உள் நாட்டு பிரச்சனைகள் மற்றும் ரஷ்யாவின் படைகளை எதிர்ப்பது என 2 முனை சவால்களை சமாளிக்க வேண்டிய நெருக்கடியில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளார். வல்லரசு நாடான ரஷ்யா இதுவரை வான்வெளியில் ஏவுகனை தாக்குதலை நடத்தாத நிலையில், உக்ரைனின் ஒவ்வொரு நகரமாக வீழ்ந்து வருகின்றன. உலக நாடுகளுக்கும் இந்தப் போரால் பாதிப்பு ஏற்படுவதால், போர் நிறுத்தம் ஏற்படுவதை அனைத்து நாடுகளும் எதிர்பார்த்துள்ளன. போரை தொடர்ந்து நடத்துவதில் பிடிவாதமாக இருக்கும் புதின், ஐநா பொதுச் செயலாளரின் முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Published by:Musthak
First published:

Tags: Russia - Ukraine