மியான்மரில் 54 பேர் சுட்டுக் கொலை: ஐ.நா கண்டனம்...

மியான்மரில் 54 பேர் சுட்டுக் கொலை: ஐ.நா கண்டனம்...

மியான்மர் போராட்டம்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை சுட்டுக் கொல்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

 • Share this:
  மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதனைக் கண்டித்து கடந்த 4 வாரங்களாக அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், ஆங் சாங் சூகி உள்ளிட்ட அரசியல் தலைவர்களை விடுவிக்கக்கோரி ஞாயிற்றுக்கிழமை பல்லாயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

  ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் விதமாக நடைபெற்று வரும் இந்த போராட்டங்களை ராணுவம் இரும்புக் கரம் கொண்டு அடக்கி வருகிறது. போராட்டக்கார்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியும், கண்ணீர்புகை குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியதில், 54 பேர் உயிரிழந்துள்ளனர்.

  மேலும் படிக்க... புதுச்சேரி மாஹே பிராந்தியத்தில் 18 கிலோ தங்கம் பறிமுதல்..

  எனினும், யங்கூன், மாண்டலே உள்ளிட்ட நகரங்களில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், மியான்மரில் அமைதி வழியில் போராட்டம் நடத்துபவர்களுக்கு எதிரான ராணுவத்தின் ஒடுக்குமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் மிஷல் பாஸ்லெட் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், போராட்டக்காரகளை சுட்டுக் கொல்வதையும், சிறைபிடிப்பதையும் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: