டெல்லி கலவர விவகாரத்தை உற்று கவனித்துவருகிறோம்! ஐ.நா சபை

ஐநா சபை

 • Share this:
  டெல்லி கலவரம் தொடர்பான விவகாரத்தை உற்று கவனித்து வருவதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது.

  குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தலைநகர் டெல்லியில் நடைபெறும் போராட்டம் கலவரமாக மாறியது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வந்திருந்த அன்று தொடங்கிய கலவரம் இரு தினங்களாக நீடித்தது. அந்த கலவரத்தின் காரணமாக இதுவரையில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குடியிருப்புகளும் கார்களும், கடைத் தெருக்களும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.

  இந்தியாவின் தலைநகரில் கலவரம் ஏற்பட்ட நிலையில் அது உலக அரங்கில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்தநிலையில், டெல்லியில் நடைபெறும் கலவரம் தொடர்பாக பேசிய ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியா கட்டர்ஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபேன் டுஜாரிக், ‘போராட்டக்காரர்கள் அமைதியாக போராட்டம் நடத்துவதற்கு அனுமதியளிக்க வேண்டியது அவசியம் என்று நான் நினைக்கிறேன். டெல்லி கலவரம் தொடர்பாக உற்றுநோக்கிவருகிறோம்’ என்று தெரிவித்தார்.

  Also see:
  Published by:Karthick S
  First published: