பருவநிலை மாற்றத்தால் இந்தியாவுக்கு பெரும் ஆபத்து! ஐநா பொதுச் செயலாளர் எச்சரிக்கை

பருவநிலை மாற்றத்தால் இந்தியாவுக்கு பெரும் ஆபத்து! ஐநா பொதுச் செயலாளர் எச்சரிக்கை
அண்டோனியா குட்ரஸ்
  • News18
  • Last Updated: November 5, 2019, 9:11 PM IST
  • Share this:
கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் இந்தியா பெரும் ஆபத்தில் இருப்பதாக ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியா குட்ரஸ் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெறும் ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்ற ஐ.நா பொதுச்செயலாளர் குட்ரஸ், முன்பு கணிக்கப்பட்டதை விட தற்போது கடல் மட்டம் வேகமாக அதிகரித்து வருவதாக, கிளைமேட் சென்ட்ரல் எனும் பருவ நிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்யும் அமைப்பின் சமீபத்திய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.

பூமியின் வெப்பம் 1.5 டிகிரி செல்சியசுக்கு மிகாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்றும், வரும் 2050-ம் ஆண்டுக்குள் 45 சதவீத அளவுக்கு கரியமில வாயு கட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் கூறினார். புவி வெப்பமயமாவதால், இந்தியா, சீனா, ஜப்பான், வங்கதேசம் ஆகிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும். தாய்லாந்தில் 10 சதவீத மக்கள் வசிக்கும் பகுதிகள் கடலுக்குள் மூழ்கும் என்றும் குட்ரஸ் கூறினார்.


Also see:

First published: November 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்