Home /News /international /

உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 1,119 பேர் உயிரிழப்பு : ஐ.நா. தகவல்

உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 1,119 பேர் உயிரிழப்பு : ஐ.நா. தகவல்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஒரு மாத காலம் கடந்துள்ள நிலையில் இரு தரப்புக்கும் இடையே சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்ற போதிலும் எந்த முடிவும் எட்டப்படாமல் உள்ளது.

உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 1,119 பேர் உயிரிழந்திருப்பதாக ஐநா தகவல் அளித்துள்ளது. 1,790 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

உயிரிழந்தவர்களில் 15 பேர் சிறுமிகள், 32 பேர் சிறுவர்கள். 52 குழந்தைகள் ஆணா அல்லது பெண்ணா என்று அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துள்ளது என்று ஐநா கூறியுள்ளது.

இந்த தகவல்கள் போர் தொடங்கிய பிப்ரவரி 24-ம் தேதி முதல் மார்ச் 26-ம்தேதி இரவு வரை திரட்டப்பட்டவை. அரசு தரப்பில் திரட்டப்பட்ட தகவல்கள் இவை என்றாலும், உண்மையான பலி எண்ணிக்கை இன்னும் அதிகரித்திருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க - ஆப்கனில் பெண்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சிகரமான தடை விதித்த தாலிபான்கள்

உக்ரைனின் மரியுபோல், கீவ், டோனெட்ஸ்க், இசியம், போபஸ்னா, லுஹான்ஸ்க்கின் ரூபிஸ்னே, சுமியின் ட்ராஸ்டியா நெட்ஸ் ஆகிய பகுதிகளில் தொடர் சண்டை நடந்து வருகிறது.

வெடிகுண்டு தாக்குதல், ராக்கெட் லாஞ்சர்கள், ஏவுகணை தாக்குதல் உள்ளிட்டவற்றால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க - அமெரிக்கா கூட எங்களை தாக்க பயப்படும்.. அதற்கு இதுதான் காரணம்... வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் 5 வாரத்தை எட்டியுள்ளது. இரு தரப்புக்கும் இடையே சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்ற போதிலும் எந்த முடிவும் ஏற்படவில்லை.

உக்ரைன் அளித்துள்ள தகவலின்படி ரஷ்ய வீரர்கள் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து விட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுகுறித்து ரஷ்யா அதிகாரப்பூர்வ தகவல் எதையும் வெளியிடவில்லை.

.
Published by:Musthak
First published:

Tags: Russia - Ukraine

அடுத்த செய்தி