ஆப்கானிஸ்தான் நாடு தற்போது உணவு பஞ்சத்தில் சிக்கியுள்ளது. அவசர நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், பல லட்சக்கணக்கான ஆப்கானியர்கள் குளிர்காலத்தில் பட்டினியால் உயிரிழக்க நேரிடும் என்று ஐ.நா. எச்சரித்துள்ளது.
அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் வசம் சென்றது. தாலிபான்களின் கைகளுக்கு போனபின், ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கி தவித்த ஆப்கானிஸ்தானில் நிலை மேலும் மோசமானது. அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கபடாமல் உள்ளது. மேற்கத்திய நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கான உதவியை நிறுத்தின மற்றும் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியமும் பணம் செலுத்துவதை நிறுத்தியது.
ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% அல்லது அதற்கு மேல் வெளிநாட்டு உதவியிலிருந்து வரும்போது அந்த நாடு உதவி சார்ந்ததாகக் கருதப்படுகிறது. உலக வங்கியின் கூற்றுப்படி, ஆப்கானிஸ்தான் விஷயத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40% சர்வதேச உதவியாக இருந்தது.
தற்போது, அந்நாட்டு கடும் உணவு பஞ்சத்தில் சிக்கியுள்ளது. பல ஆப்கானியர்கள் இப்போது உணவு வாங்க தங்கள் உடைமைகளை விற்று வருகின்றனர். உலக உணவுத் திட்டம் (WFP), நிர்வாக இயக்குநர், டேவிட் பீஸ்லி கூறுகையில், ஆப்கானிஸ்தானின் 39 மில்லியன் மக்களில் பாதிக்கு மேல் 22.8 மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் பட்டினியை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றனர். 2 மாதங்களுக்கு முன்பு இந்த எண்ணிக்கை 14 மில்லியனாக இருந்தது.
இதையும் படிங்க: டி20 போட்டியில் பாகிஸ்தான் வென்றது இஸ்லாத்திற்கு கிடைத்த வெற்றி: பாக்., அமைச்சர் சர்ச்சை கருத்து!!
‘நாம் கணிப்பது நாம் எதிர்பார்த்ததை விட வேகமாக உண்மையாகிவிடும். யாரும் எதிர்பார்த்ததை விட வேகமாக காபூல் வீழ்ச்சியடைந்தது மற்றும் பொருளாதாரம் அதை விட வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளது’ என்று அவர் கூறியுள்ளார். ‘குழந்தைகள் இறக்கப் போகிறார்கள். மக்கள் பட்டினி கிடக்கிறார்கள். விஷயங்கள் மிகவும் மோசமாகப் போகிறது’ என்று குறிப்பிட்டுள்ள டேவிட் பீஸ்லி மனிதாபிமான செயல்களுக்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் படிக்க: பருவநிலை மாற்றம்: கவலை அளிக்கக் கூடிய நாடுகள் பட்டியலில் இந்தியா!
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.