கொரோனா 2வது அலை: இந்தியாவுக்கு உதவ தயார் - போரிஸ் ஜான்சன்

போரிஸ் ஜான்சன்

பிற நாடுகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளி பல மடங்கு பாதிப்பை இந்தியா சந்தித்துள்ளதால் இந்தியாவுக்கு பயணம் செய்ய பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தடை விதித்துள்ளன.

  • Share this:
கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிற்கு உதவ பிரிட்டன் அரசு தயாராக இருப்பதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. தினசரி அளவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 3 லட்சத்தையும், பலி எண்ணிக்கை 2,000ஐயும் கடந்துவிட்டது. பாதிப்பு மற்றும் உயிரிழப்பின் அளவு தினந்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்வதால் நாட்டில் சுகாதார கட்டமைப்பு முடங்கிப் போயுள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் கொரோனா பாதித்தவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் சிகிச்சை அளித்தும் உதவியும் வருகின்றனர். அதே நேரத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் வேகமெடுத்து வருகின்றது.

பிற நாடுகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளி பல மடங்கு பாதிப்பை இந்தியா சந்தித்துள்ளதால் இந்தியாவுக்கு பயணம் செய்ய பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தடை விதித்துள்ளன.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், கொரோனாவின் 2வது அலையுடன் போராடிக் கொண்டிருக்கும் இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் எந்த வகையில் உதவி செய்யலாம் என பார்க்கிறோம்.

இந்தியா எங்களின் சிறந்த நட்பு நாடு எனவும் போரிஸ் ஜான்சன் குறிப்பிட்டார். பிரிட்டனின் உதவியானது வெண்டிலேட்டர்கள் அல்லது சிகிச்சை தொடர்பானதாக இருக்கலாம் என பிரிட்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவுக்கு தேவையான ஆதரவு மற்றும் உதவியை வழங்கத் தயாராக இருக்கிறோம் என்று சீனாவும் உறுதி அளித்துள்ளது.

சீனாவின் அயலுறவு அமைச்சகம், இந்தியாவின் கொரோனா இரண்டாம் அலையினால் ஏற்பட்டுள்ள ‘மோசமான, ஆபத்தான சூழ்நிலையை’ கருத்தில் கொள்வதாக கூறியுள்ளது., சீன அதிகாரப்பூர்வ ஊடகம் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு சீன வெளியுறவு அமைச்சகம் இவ்வாறு உதவத் தயாராக இருப்பதாக பதிலளித்துள்ளது.

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறும்போது, “கோவிட்-19 பெருந்தொற்று மனித குலத்துக்கே விரோதியாகும். இதற்கு பன்னாட்டு ஒற்றுமையும் பரஸ்பர உதவியுமே தீர்வு” என்று கூறினார்.
Published by:Arun
First published: