ஆப்கன் தலைநகர் காபுலில் சிக்கித் தவிக்கும் தங்கள் நாட்டினரை மீட்பதற்காக சென்ற உக்ரைன் விமானம் ஆயுதமேந்தியவர்கள் சிலரால் ஈரானுக்கு கடத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இத்தகவல் உலக நாடுகளை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
போரினால் சிக்கி சின்னாபின்னமாகி இருக்கும் ஆப்கானிஸ்தான், அமெரிக்கப் படைகள் வெளியேற்றத்தை தொடர்ந்து அரசுப் படைகளின் வீழ்ச்சியின் காரணமாக தாலிபான்கள் கைக்குள் சென்றுள்ளது. அங்கு நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால் இந்தியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள், ஆப்கனில் சிக்கித்தவிக்கும் தங்கள் நாட்டினரை போர்க்கால அடிப்படையில் மீட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இந்தியா சி17 குளோப் மாஸ்டர் விமானங்கள் மூலமும், ஏர் இந்தியா விமானங்கள் மூலம் காபுலில் இருந்து இந்தியர்களை பத்திரமாக மீட்டுக் கொண்டு வந்துகொண்டிருக்கிறது. காபுல் விமான நிலையத்தின் ஒரு பகுதி அமெரிக்கப் படைகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இந்த மீட்பு நடவடிக்கைகள் தாலிபான்கள் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
Also Read:
சென்னையில் லேசான நில நடுக்கம்- பொதுமக்கள் அதிர்ச்சி!
இதனிடையே காபுலில் சிக்கித்தவிக்கும் தங்கள் நாட்டினரை மீட்பதற்காக அனுப்பப்பட்ட விமானத்தை ஆயுதம் ஏந்திய சிலர் காபுலில் இருந்து ஈரானுக்கு கடத்திச் சென்றதாக உக்ரைன் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் யெவ்ஜெனி யென் (Yevgeny Yenin) தெரிவித்துள்ளார்.
கடத்தப்பட்ட அந்த விமானத்தில் மீட்கப்படுவதற்காக காத்திருந்த உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு பதிலாக வேறு சிலர் இருந்ததாகவும் அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய கும்பல் இதை செய்திருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் உக்ரைன் நாட்டினரை மீட்கும் மூன்று முயற்சி தோல்வியில் முடிவடைந்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
Also Read:
தாலிபான்களுக்கு சிம்மசொப்பனமாக திகழும் பஞ்ஷிர் நாயகன் சரண் அடைகிறாரா?
உக்ரைன் அரசுத் தரப்பின் இந்த குற்றச்சாட்டு உலக நாடுகளிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது, ஏனெனில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் இன்னமும் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்களை மீட்பதற்காக சிறப்பு விமானங்களை அனுப்பி வைத்து வருகின்றன. அதே நேரத்தில் உக்ரைன் தரப்பின் குற்றச்சாட்டை ஈரான் திட்டவட்டமாக மறுத்திருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இது தொடர்பாக ஈரான் கூறுகையில், நேற்றிரவு 10 மணியளவில் உக்ரைன் விமானம் ஒன்று எரிபொருள் நிரப்புவதற்காக மஷாதில் தரையிறங்கியது. பின்னர் எரிபொருள் நிரப்பிக்கொண்டு Kyiv நகருக்கு சென்றதாக ஈரான் சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் செய்தித் தொடர்பாளர் முகமது ஹசன் ஜிபக்ஷ் (Mohammad Hassan Zibakhsh) கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.