Home /News /international /

உக்ரைன் வீரரின் மனைவி என்று தெரிந்ததும் பாலியல் வன்முறை செய்தனர்.. ரஷ்ய ராணுவம் மீது பெண் குற்றச்சாட்டு

உக்ரைன் வீரரின் மனைவி என்று தெரிந்ததும் பாலியல் வன்முறை செய்தனர்.. ரஷ்ய ராணுவம் மீது பெண் குற்றச்சாட்டு

ரஷ்யா - உக்ரைன் போர்

ரஷ்யா - உக்ரைன் போர்

Russia- ukraine war: கடையில் வீடு திரும்பிய அப்பெண்ணை பின் தொடர்ந்த ரஷ்ய வீரர்கள், வீடு வந்தது, அப்பெண்ணின் ஆடைகளை துப்பாக்கி முனையில் கழற்றி பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளனர்.

    உக்ரைன் ராணுவ வீரரின் மனைவியை ரஷ்ய படையினர் துப்பாக்கி முனையில் பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தான் வாழ விரும்பவில்லை என்றூ பாதிக்கப்பட்ட பெண் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

    உக்ரைன் மீது ரஷ்யா பிப்ரவரி 24ஆம் தேதி முதல் போர் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் எல்லைக்குள் நுழைந்து ரஷ்யா ராணுவம் நடத்திவரும் தாக்குதல் காரணமாக அந்நாட்டின் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், இதுவரை நாற்பது லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர்.

    உக்ரைனில் மனித உரிமைகள் மீறலில் ரஷ்ய ராணுவம் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, அந்நாட்டு பெண்களை ரஷ்ய ராணுவம் பாலியல் வன்புணர்வு செய்வதாக கூறப்படும் நிலையில், இதனை உறுதிப்படுத்தும் விதமாக பெண் ஒருவர் ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார்.

    உக்ரைனின் கேர்சன் பகுதியைச் சேந்த அப்பெண்ணின் கணவர் உக்ரைன் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். போர் தொடங்கியதும் தனது 4 குழந்தைகளையும் அப்பெண் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பிவைத்து தற்போது தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், மளிகை பொருட்கள் வாங்குவதற்காக அப்பெண் கடைக்கு சென்றபோது, அவர் உக்ரைன் வீரரின் மனைவி என ரஷ்ய படையிடம் அங்கிருந்த வாடிக்கையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: இந்தியாவுடன் அமைதியான உறவை பாகிஸ்தான் விரும்புகிறது - புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் ட்வீட்


    இந்நிலையில், கடையில் வீடு திரும்பிய அப்பெண்ணை பின் தொடர்ந்த ரஷ்ய வீரர்கள், வீடு வந்தது, அப்பெண்ணின் ஆடைகளை துப்பாக்கி முனையில் கழற்றி பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளனர். மாறி மாறி பாலியல் வன்புணர்வு செய்த பின்னர், மாலை 4 மணியளவில் அவர்கள் சென்றுவிட்டனர் என்று கூறியுள்ள அப்பெண், தன்னை பற்றி ரஷ்ய வீரர்களிடம் தகவல் கூறிய பெண்ணை தேடி கண்டுபிடித்து அவர் பற்றி விவரங்களை தன் கணவரிடம் கூறப் போவதாக தெரிவித்துள்ளார்.

    மேலும் படிக்க: பொருளாதார நெருக்கடி : திவால் நிலையை அறிவித்துள்ள இலங்கை அரசு!


    மேலும், ரஷ்ய வீரர்களிடம் இருந்து உக்ரைன் இந்தப் பகுதிகளை திரும்பப் பெறும் என்றும், எங்கள் வீரர்கள் அவர்களைப் பழிவாங்குவார்கள் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன்’ என அப்பெண் கூறியுள்ளார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Russia - Ukraine, War

    அடுத்த செய்தி