ஹோம் /நியூஸ் /உலகம் /

ரஷ்யாவின் கடும் தாக்குதலால் உக்ரைன் மக்களுக்கு நேர்ந்த அடுத்த சோகம்

ரஷ்யாவின் கடும் தாக்குதலால் உக்ரைன் மக்களுக்கு நேர்ந்த அடுத்த சோகம்

உக்ரைன் - இருளில் தவிக்கும் பொதுமக்கள்

உக்ரைன் - இருளில் தவிக்கும் பொதுமக்கள்

மின்சாரம் தயாரிக்கும் ஆலைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகள் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கடந்த 8 மாதங்களாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களால் உக்ரைன் கிட்டத்தட்ட உருக்குலைந்துள்ளது என்றே சொல்லலாம். ஏராளமான பொருட்சேதம் மற்றம் உயிர் சேதம் ஏற்பட்டுள்ள நிலையிலும் கூட தாக்குதலை நிறுத்த ரஷ்யா முன்வரவில்லை. உக்ரைன் தலைநகர் கீவ் மக்கள் வாழ்வதற்கே தகுதியான நிலையில் இல்லை என சர்வதேச  நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. அந்த அளவிற்கு உட்கட்டமைப்பு வசதிகள் முற்றிலும் உருக்குலைந்துள்ளன.

  மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், மின்உற்பத்தி நிலையங்கள் மற்றும் நீர்நிலைகள் என மக்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்யும் உட்கட்டமைப்பு வசதிகள் சீர்குலைக்கப்பட்டுவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், தற்போது மீதமிருக்கும் மின் உற்பத்தி நிலையங்கள் மீதும் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் நகரமே இருளில் மூழ்கியுள்ளதாக ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். ஏற்கனவே மின்சாரம் மற்றும் போதிய உணவுப்பொருட்கள் இல்லாமல் சுமார் 45 லட்சம் பொதுமக்கள் அவதியடைந்து வரும் நிலையில் ரஷ்யாவின் கூடுதல் தாக்குதல் நிலைமையை மேலும் சிக்கலாக்கும் என ஜெலன்ஸ்கி கவலை தெரிவித்துள்ளார்.

  மின்சாரம் இல்லாமல் இருக்கும் நிலையில் ரஷ்யா மின்உற்பத்தி நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதால் பொதுமக்கள் மேலும் சிரமங்களை சந்திக்கலாம் என்பதால்,  கீவ் நகரில் இருந்து தற்காலிகமாக வெளியேறுவது நல்லது என கீவ் நகர மேயர் விடாலி கிலிட்ஸ்கோ பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

  இதே போல் ரஷ்யாவால் தனிப்பிராந்தியமாக அறிவிக்கப்பட்ட கேர்சானும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மின்பாதைகள் மற்றும் அணைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் மின்சாரம் இல்லாமலும், தண்ணீர் கிடைக்காமலும் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

  Also Read : மொத்தம் ரூ.100 மில்லியன்.. போலீசாரின் வங்கிக் கணக்கில் கொட்டிய பண மழை..!

  இதில் விநோதம் என்னவென்றால் பொதுமக்களின் இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம் என ரஷ்யாவும், உக்ரைனும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகிறார்கள். இதே போல் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் நோவா ககோவ்கா அணையை ஏவுகனை தாக்குதல் மூலம் உக்ரைன் உடைத்து விட்டதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் ரஷ்யாவின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என உக்ரைன் பதில் அளித்துள்ளது.

  எது எப்படியோ… அதிகாரப் போட்டிக்காக தொடங்கப்பட்ட யுத்தம் கிட்டத்தட்ட எட்டு மாதங்களைக் கடந்து இன்னும் நடைபெற்று வருகிறது. பல ஆயிரம் கோடி பொருள் நட்டமும், பல ஆயிரம் உயிர்களின் இழப்பும் ஏற்பட்ட பிறகும் கூட போரை நிறுத்துவதற்கான முகாந்திரங்கள் தென்படவில்லை. ஆனால், இந்தப் போரால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது என்னவோ சாமானிய மக்கள் தான். போர் முடிவுக்கு வந்தாலும் உக்ரைன் வாழும் தகுதியுடைய நாடாக மீண்டெழ இன்னும் பல ஆண்டுகள் பிடிக்கும் என கணித்திருக்கிறார்கள் வல்லுநர்கள்.

  Published by:Vijay R
  First published:

  Tags: Russia - Ukraine