ஹோம் /நியூஸ் /உலகம் /

அணு ஆயுதத்தை பயன்படுத்துவோம்.. ரஷ்யாவின் அறிவிப்பை தொடர்ந்து உக்ரைன் எடுத்த அதிரடி முடிவு

அணு ஆயுதத்தை பயன்படுத்துவோம்.. ரஷ்யாவின் அறிவிப்பை தொடர்ந்து உக்ரைன் எடுத்த அதிரடி முடிவு

உக்ரைன் ’நேட்டோ’கூட்டமைப்பில் சேர விண்ணப்பம் அளித்துள்ளது

உக்ரைன் ’நேட்டோ’கூட்டமைப்பில் சேர விண்ணப்பம் அளித்துள்ளது

ரஷ்யாவை எதிர்த்து நேட்டோவில் சேர உக்ரைன் விண்ணப்பம் அளித்துள்ளதாகப் பிரதமர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • international, IndiaKyiv Kyiv

  உக்ரைனின் 4 பிராந்தியங்களை ரஷ்யா தன்னுடையது என்று அறிவித்த நிலையில் ரஷ்யாவை எதிர்த்து நேட்டோவில் சேர உக்ரைன் விண்ணப்பம் அளித்துள்ளதாகப் பிரதமர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

  ரஷ்யா வெள்ளிக்கிழமை அன்று உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜாபோர்ஷியா ஆகிய 4 பிராந்தியங்களை தன்னுடையது என்று அறிவித்து ரஷ்யாவுடன் இணைத்துக்கொண்டதாக அறிவித்தது.

  ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரைன் நாட்டின் மீது போர் அறிவித்து ராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வந்தார். தொடர்ந்து எட்டு மாதங்கள் ஆகியும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் இந்த திடீர் படையெடுப்பு ஓயாத நிலையில் ராணுவ தாக்குதலில் உக்ரைனிடமிருந்து கைப்பற்றிய பகுதிகளை தற்போது ரஷ்யா தன்னுடையது என்று அதிபர் புதின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் ரஷ்யா உக்ரைனுக்கு எதிராக  அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்றும் பகிரங்கமாக அறிவித்தனர்.

  இதனைத் தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் அதிரடியாக நேட்டோவில் சேர விண்ணப்பம் அளித்துள்ளது. ரஷ்யாவின் செயல்களை உக்ரைன் எதிர்த்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக உக்ரைன் பிரதமர் வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

  Also Read : உக்ரைனின் 4 பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டது.. அதிபர் விளாதிமிர் புதின் அறிவிப்பு

  அதில் நாங்கள் நேட்டோ கூட்டமைப்பில் இணைவதற்கான தகுதியை நிருபித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைன் ரஷ்யாவுடன் எந்த வித பேச்சுவார்த்தையும் நடத்த தயாராக இல்லை என்றும் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் அதிபராக புதின் இருக்கும் வரை கீவ் பேச்சுவார்த்தையில் ஈடுபடாது என்று திட்டவட்டமாகக் கூறினார். ரஷ்யாவிற்கு புதிய அதிபர் வரும் போது தான் பேசுவோம் என்று பகிரங்கமாக வீடியோவில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

  உக்ரைனிடமிருந்து கைப்பற்றிய 4 பிராந்தியங்களில் மக்களிடம் விருப்பம் கேட்கப்பட்டு தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ரஷ்யா கூறியதை உக்ரைன் கடுமையாக எதிர்த்துள்ளது. மேலும் அதனை இதர நாடுகளும் ஒப்புக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Janvi
  First published:

  Tags: NATO Force, Russia - Ukraine