உக்ரைன் அரசின் ராணுவ வலைதளம் உட்பட முக்கிய இணைய பக்கங்களில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் ரஷ்யா இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய எதிர்ப்பு தெரிவித்து வரும் ரஷ்யா அந்நாட்டின் கிழக்கு எல்லைப்பகுதியில் 1 லட்சம் வீரர்களையும் எஸ்-400 ஏவுகணை அமைப்பு உள்ளிட்ட நவீன ஆயுதங்களை குவித்து அச்சுறுத்தி வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா எந்நேரமும் வான்வழி தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக அமெரிக்கா தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.
இந்நிலையில், , உக்ரைனின் தெற்கு மற்றும் கிழக்கு எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த படைகளை மீண்டும் முகாம்களுக்கு ரஷ்யா திரும்ப அழைத்தது. ஜெர்மன் ஆட்சித்துறைத் தலைவர் ஓலாஃப் ஸ்கால்ஸ் ரஷ்ய பயணத்தின் முன்னோட்டமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், ரஷ்யாவின் தாக்குதல் இன்னமும் உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 26 ஆண்டுகளாக வாக்கிய பிழையுடன் ஞானஸ்தானம் வழங்கி வந்த பாதிரியார்... செல்லாது என்பதால் ஆயிரக்கணக்கானோர் அதிர்ச்சி
இந்நிலையில், உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சக வலைதளம் மற்றும் இரண்டு வங்கி இணையதளங்கள் நேற்று சைபர் தாக்குதலை எதிர்கொண்டன. உக்ரைனில் மிகப்பெரிய வங்கிகளான Oschadbank state savings bank and Privat24 ஆகியவற்றின் இணையப்பக்கங்கள் முடக்கப்பட்டன. பின்னர் அவை சரி செய்யப்பட்டன. DDOS தாக்குதலை Privat24 வங்கி எதிர்கொண்டதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த சைபர் தாக்குதலுக்கு பின்னணியில் ரஷ்யா இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cyber attack, Russia, Russia - Ukraine