Home /News /international /

ரஷ்யத் தாக்குதலால் மரியுபோலில் 80% கட்டடங்கள் சேதம் - உக்ரைன்

ரஷ்யத் தாக்குதலால் மரியுபோலில் 80% கட்டடங்கள் சேதம் - உக்ரைன்

மரியுபோல்

மரியுபோல்

மரியுபோல் நகரை தொடர்ந்து ரஷ்ய படைகள் முற்றுகையிட்டு வருகின்றன. நகரின் நடுப்பகுதியை அந்நாட்டு படைகள் அடைந்துவிட்டதாகவும், சுமார் 4 லட்சம் மக்கள் அங்கு சிக்கியுள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.

  • News18
  • Last Updated :
    ரஷ்யாவின் தொடர் தாக்குதலால் மரியுபோல் நகரின் 80 சதவிகித கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

    மரியுபோல் நகரை தொடர்ந்து ரஷ்ய படைகள் முற்றுகையிட்டு வருகின்றன. நகரின் நடுப்பகுதியை அந்நாட்டு படைகள் அடைந்துவிட்டதாகவும், சுமார் 4 லட்சம் மக்கள் அங்கு சிக்கியுள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.

    மின்சாரம், குடிநீர் போன்றவை துண்டிக்கப்பட்டதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். புதன்கிழமை குண்டு வெடிப்புக்கு ஆளான திரையரங்கில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    உக்ரைன் வசம் இருந்த கிரிமியாவை போர் மூலம் ரஷ்யா இணைத்துக் கொண்டதன் எட்டாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், லுஷ்னிகி மைதானத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இதில் பங்கேற்று பேசிய ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் போரில் பங்கேற்றுள்ள ரஷ்ய ராணுவ வீரர்களை பாராட்டினார். உக்ரைனில் உள்ள தனது எதிரிகளை நவ நாஜிக்கள் என்றும் விமர்சித்தார்.

    Also read... ‘ஒரே ஒரு போர்’, 10 வினாடிகளில் முடிந்துவிடும் – ரஷ்ய அதிபர் புடினுக்கு நேரடி சவால் விடுத்த எலான் மஸ்க்

    அங்கு நடைபெறும் இனப்படுகொலையை தடுக்க உக்ரைன் மீதான போர் நடவடிக்கை அவசியம் எனவும் புதின் தெரிவித்தார். இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்ற இந்த பொதுக்கூட்டத்தில், ரஷ்ய தேசபக்தி பாடல்கள் இடம் பெற்ற கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Russia - Ukraine

    அடுத்த செய்தி