ஹோம் /நியூஸ் /உலகம் /

போர் தொடங்கி 8 மாதங்களுக்கு பிறகு.. ரஷ்யா திரும்பிய 108 பெண்கள்!

போர் தொடங்கி 8 மாதங்களுக்கு பிறகு.. ரஷ்யா திரும்பிய 108 பெண்கள்!

பெண் கைதிகள் விடுவிப்பு

பெண் கைதிகள் விடுவிப்பு

நாங்கள் 108 பெண்களை சிறையிலிருந்து விடுவித்துள்ளோம். போர் தொடங்கியதில் இருந்து இது முதல் முழு பெண் பரிமாற்றம்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inter, IndiaRussia

  கிட்டத்தட்ட எட்டு மாத ரஷ்ய -உக்ரைன் போருக்குப் பிறகு முதல் முறையாக  பெண் கைதிகள் பரிமாற்றம் தற்போது நடந்துள்ளது. திங்களன்று, உக்ரைன் 100 க்கும் மேற்பட்ட கைதிகளை ரஷ்யாவுடன் மாற்றிக் கொண்டதாக அறிவித்துள்ளது.

  "இன்று மற்றொரு பெரிய அளவிலான கைதிகளின் கூட்டத்தை பரிமாற்றம் செய்துள்ளோம். நாங்கள் 108 பெண்களை சிறையிலிருந்து விடுவித்துள்ளோம். போர் தொடங்கியதில் இருந்து இது முதல் பெண் கைதிகளின் பரிமாற்றம்" என்று உக்ரைனின் தலைமை அதிகாரி ஆண்ட்ரி யெர்மக் சமூக ஊடகங்களில் தெரிவித்தார்.

  கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் பகுதியின் தலைவர் டெனிஸ் புஷிலின் இந்த பரிமாற்றத்தை உறுதிப்படுத்தினார். பரிமாற்றத்தில் ஒப்புக்கொண்ட 108 நபர்களை உக்ரைன் திருப்பி அனுப்பியுள்ளனர்.

  குப்பைகளுக்கு தீ வைப்பு.. நொறுக்கப்பட்ட வாகனங்கள்! விலைவாசி உயர்வால் போர்க்களமான பாரிஸ்!

  உக்ரைனில் இருந்து திரும்பிய 72 பேர், உக்ரைன் வசம் உள்ள சிவில் கப்பல்களின் பணியாளர்கள் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. திரும்பியவர்கள் அனைவரும் மாஸ்கோவிற்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டு மருத்துவ மற்றும் உளவியல் உதவி வழங்கப்படும் என்று ரஷ்ய கூறியது.

  பரிமாறப்பட்டவர்களில் சிலர் தாய்மார்கள் மற்றும் மகள்கள் ஒன்றாக இருந்ததாக உக்ரைன் தரப்பில் கூறப்பட்டது. முப்பத்தேழு பேர், மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் ஸ்டீல் வேலைகளில் ஈடுபட்டிருந்தவர்கள் சரணடைந்ததாக கூறப்படுகிறது.

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: Russia - Ukraine, Women Prisoners