உக்ரைனின் சுமி நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர்.
எல்லைப் பிரச்னையால் ரஷ்யா - உக்ரைன் இடையே மோதல் அதிகரித்துள்ள நிலையில், உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்யா குண்டுமழை பொழிவதால் சேதங்கள் அதிகரித்துள்ளன.
கீவ் நகர் அருகே உள்ள சயோட்மையர் பகுதியில் ரஷ்யா நடத்திய தாக்குதலில், பெட்ரோல் கிடங்கில் தீப்பற்றியது. சுமி நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில், ஏராளமான கட்டடங்கள் குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புகள் தீக்கிரையாயின.
மைக்கோலைவ் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஏற்பட்ட தீ விபத்தால் 4 பேர் உயிரிழந்தனர். இதேபோல் கார்கிவ் நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலால், அடுக்குமாடி குடியிருப்புகள் சேதம் அடைந்தன.
உக்ரைனில் இருந்து தமிழ்நாட்டுக்கு இதுவரை ஆயிரத்து 90 மாணவர்கள் திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று இரவு தனி விமானத்தில் மேலும் 123 மாணவர்கள் சென்னை திரும்புகின்றனர். இந்நிலையில் உக்ரைனில் மருத்துவம் படிக்கும் ஒசூரை சேர்ந்த மாணவர் அருளானந்தத்தின் பெற்றோர் முத்துக்குமரன் -தீபா குமாரி ஆகியோர், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு, 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினர்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.