முகப்பு /செய்தி /உலகம் / போருக்கு மத்தியில் உக்ரைன் அதிபர் மற்றும் அவரது மனைவி செயலால் கொத்தி எழுந்த மக்கள்

போருக்கு மத்தியில் உக்ரைன் அதிபர் மற்றும் அவரது மனைவி செயலால் கொத்தி எழுந்த மக்கள்

உக்ரைன் அதிபர் மற்றும் அவரது மனைவி செயலால் கொத்தி எழுந்த மக்கள்

உக்ரைன் அதிபர் மற்றும் அவரது மனைவி செயலால் கொத்தி எழுந்த மக்கள்

Russia - Ukraine War | உக்ரைன் ராணுவ வீரர்கள் ஒவ்வொரு நாளும் பெருமளவில் இறந்து வருகின்றனர். ஆனால், ஜெலனஸ்கி ஃபோட்டோசூட் நடத்திக் கொண்டிருக்கிறார் என்று விமர்சனம் எழுந்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. அப்போது முதல் இரு நாடுகளுக்கு இடையே மிக தீவிரமான சண்டை நடைபெற்று வருகிறது. குறிப்பாக, ரஷியாவின் அதிரடித் தாக்குதல்களால் மிகுந்த பாதிப்புகளை உக்ரைன் எதிர்கொண்டு வருகிறது. இருநாடுகளுக்கு இடையிலான போரில் இதுவரையில் 47 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர் என்றும், சுமார் 1.7 கோடி பேர் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தவிர எண்ணற்ற மக்கள், ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர். இதுவரையிலும் சுமார் 60 ஆயிரம் கோடி டாலர் வரையில் பொருளாதார இழப்புகள் ஏற்பட்டிருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

அதே சமயம், ரஷியா - உக்ரைன் இடையிலான போர் காரணமாக உலக வர்த்தகமும் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும், இயற்கை எரிவாயு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதேபோன்று கோதுமை, சமையல் எண்ணெய் போன்ற உணவு பொருட்களின் விநியோகம் பாதிக்கப்படுவதால் அவ்வப்போது கடுமையான விலை ஏற்ற, இறக்கங்கள் காணப்படுகின்றன.

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அதிபரின் நடவடிக்கை

போர் காரணமாக உக்ரைன் மட்டுமல்லாமல் உலக நாடுகளும் ஏதோ ஒரு விதத்தில் பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் நிலையில், அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலனஸ்கி மேற்கொண்ட நடவடிக்கை தான் தற்போது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில், வோக் என்ற ஃபேஷன் பத்திரிகைக்காக, தனது மனைவி ஒலினா ஜெலனெஸ்கா ஆகியோர் ஃபோட்டோசூட் நடத்தியுள்ளனர். இந்தப் புகைப்படங்கள் மற்றும் அதுதொடர்பான விவாதங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

Also Read : அமெரிக்காவுடன் போர் மூண்டால் அணுஆயுதம் பயன்படுத்தப்படும்.. வடகொரியத் தலைவர் கிம் எச்சரிக்கை

ட்விட்டரில் ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

ட்விட்டர் தளத்தில் யூசர் ஒருவர் வெளியிட்டுள்ள கமெண்டில், “உக்ரைன் ராணுவ வீரர்கள் ஒவ்வொரு நாளும் பெருமளவில் இறந்து வருகின்றனர். ஆனால், ஜெலனஸ்கி ஃபோட்டோசூட் நடத்திக் கொண்டிருக்கிறார்’’ என்று விமர்சித்துள்ளார்.

மற்றொரு ட்விட்டர் யூசர் வெளியிட்டுள்ள பதிவில், “உக்ரைனுக்காக பல கோடி டாலர்களை அமெரிக்கா செலவிட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், உக்ரைன் அதிபர் ஃபோட்டோசூட் நடத்திக் கொண்டிருக்கிறார். எல்லாமே வேடிக்கையாக இருக்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

போர்க்களத்தில் மக்களை சாகடிக்க அனுப்பி வைத்துவிட்டு, ஃபோட்டோசூட் நடத்தி கொண்டிருப்பது நியாயமா என்று நெட்டிசன்கள் கண்டித்துள்ளனர். குறிப்பாக, அமெரிக்க மக்கள் பலர் சமூக வலைதளங்களில் எதிர்ப்புக் குரல் எழுப்பி வருகின்றனர்.

மின் உற்பத்தி ஆலையை கையகப்படுத்திய ரஷியா

இதற்கிடையே, உக்ரைன் மீதான பிடியை ரஷியா நாளுக்கு, நாளுக்கு தீவிரப்படுத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் இரண்டாவது பெரிய மின் உற்பத்தி ஆலையை ரஷியா கையகப்படுத்தியுள்ளது. இது மட்டுமல்லாமல் உக்ரைன் நாட்டின் தென்பகுதியில் உள்ள 3 பிராந்தியங்களை நோக்கி படைகளை நகர்த்தி வருகிறது.

First published:

Tags: Russia - Ukraine