Home /News /international /

போரை நிறுத்த புதினை சந்திக்க தயார் - உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி பேட்டி

போரை நிறுத்த புதினை சந்திக்க தயார் - உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி பேட்டி

ரஷ்யாவுடனான போரை நிறுத்த அந்நாட்டு அதிபர் புதினை சந்திப்பதற்கு எப்போதும் தயாராக உள்ளதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுடனான போரை நிறுத்த அந்நாட்டு அதிபர் புதினை சந்திப்பதற்கு எப்போதும் தயாராக உள்ளதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுடனான போரை நிறுத்த அந்நாட்டு அதிபர் புதினை சந்திப்பதற்கு எப்போதும் தயாராக உள்ளதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    கடந்த பிப்ரவரி மாத இறுதியில் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் அறிவித்து தாக்குதல் நடத்த தொடங்கியது. சுமார் இரு மாதங்களாக உக்ரைனை முற்றுகையிட்டு ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

    உக்ரைன் அரசும் சரணடையாமல் ரஷ்ய படையினரை எதிர்கொண்டு பதிலடி தந்து வருகின்றனர். இந்நிலையில், போர் குறித்து உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி முக்கிய கருத்தை தெரிவித்துள்ளார். உக்ரைன் தலைநகர் கீவ்வில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அதிபர் செலன்ஸ்கி கூறுகையில், " இந்த போரை யார் தொடங்கினாரோ அவர்களால் தான் இந்த போரை நிறுத்த முடியும். நான் ஆரம்பம் முதலே ரஷ்ய அதிபரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த தயாராக உள்ளேன்.

    நான் அவரை சந்திக்க விரும்பாமல் இல்லை. சொல்லப்போனால் புதினை சந்தித்து பேச்சு வார்த்தை மூலமாக இந்த பிரச்னையை தீர்க்க வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனால், எங்களுக்கு எங்கள் கூட்டாளிகள் மீது தான் நம்பிக்கை உள்ளது, மாறாக ரஷ்யா மீது நம்பிக்கை இல்லை" என்றார்.

    ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குவட்ரெஸ் அடுத்த வாரம் ரஷ்யா மற்றும் உக்ரைன் வரவுள்ளார். முதலில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ செல்லும் அவர் அடுத்த நாள் உக்ரைன் தலைநகர் கீவ்விற்கு வருகிறார். ஐநா பொதுச் செயலாளரின் இந்த பயணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த செலன்ஸ்கி, ஐநா பொதுச் செயலாளர் முதலில் ரஷ்யா செல்வது தவறாகும். முதலில் அவர் உக்ரைனுக்கு தான் வந்து பார்வையிட வேண்டும். அவரின் இந்த பயண முறையில் எந்த நீதியும் இல்லை என்றுள்ளார்.

    இதையும் படிங்க: செக்ஸ் படங்களை ஆய்வு செய்ய படிப்பு... அமெரிக்க கல்லூரி வழங்குகிறது

    இரு நாடுகளின் மோதலை பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க உலக நாடுகள் முயற்சித்து வரும் நிலையில், உக்ரைனின் மரியபோல் நகரில் ரஷ்யா நடத்திய தாக்குதல் அந்த முயற்சியை தகர்த்துள்ளது. மரியபோல் நகரில் உள்ள குடிமக்களை மீட்டு வெளியேற்ற ரஷ்ய ராணுவம் முட்டுக்கட்டை போடுவதாக குற்றஞ்சாட்டிய செலன்ஸ்கி, இந்த சூழலில் ரஷ்யா தாக்குதல் நடத்தினால் பேச்சு வார்த்தை என்பதே சாத்தியமில்லை என்றுள்ளார்.

    அதேபோல் கருங்கடல் பகுதியில் ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் எட்டு பேர் கொல்லப்பட்டதாகவும், 18 பேர் படுகாயம் அடைந்ததாகவும் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டோனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் லாய்டு அஸ்டின் ஆகியோர் உக்ரைன் தலைநகர் கீவ்விற்கு வருகை தந்து அதிபர் செலன்ஸ்கியை சந்திக்கவுள்ளனர். பிப்ரவரி 24ஆம் தேதி போர் தொடங்கிய நிலையில், அதன் பின்னர் அமெரிக்க மூத்த அதிகாரிகள் உக்ரைன் வருவது இதுவே முதல்முறை.
    Published by:Kannan V
    First published:

    Tags: International, Russia - Ukraine, Vladimir Putin

    அடுத்த செய்தி