முகப்பு /செய்தி /உலகம் / பாக்முட் நகரம் வீழ்ந்தால் உக்ரைனுக்கு கடும் நெருக்கடி... அதிபர் ஜெலன்ஸ்கி கவலை..!

பாக்முட் நகரம் வீழ்ந்தால் உக்ரைனுக்கு கடும் நெருக்கடி... அதிபர் ஜெலன்ஸ்கி கவலை..!

உக்ரைன் போர்

உக்ரைன் போர்

ஓராண்டுகளாக நடைபெற்று வரும் போரால் இதுவரை 80 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • inter, IndiaUkraineUkraine

நேட்டோவில் இணையும் முடிவை  அதிபர் ஜெலன்ஸ்கி எடுத்ததால் கடந்த ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது போர் தொடுத்தது ரஷ்யா. ஓராண்டைக் கடந்தும் இந்த போர் நின்ற பாடில்லை. ரஷ்யாவும், உக்ரைனும் முக்கியமான உணவு தானியங்கள் உற்பத்தி செய்யும் நாடுகள் என்பதால் இந்தப் போரால் உலக நாடுகளில் கடுமையான உணவுப் பொருள் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

அதோடு ரஷ்யாவின் எரிவாயும், எரிபொருளும் ஏற்றுமதி செய்வது தடைபட்டதால் உலக நாடுகள் பலவற்றில் பொருளாதார மந்தம் ஏற்பட்டுள்ளது. இந்தப் போரை நிறுத்த உலக நாடுகளும் ஐக்கிய நாடுகள் அவையும் எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டன. ஆனால் எதற்கும் செவிசாய்க்காமல் போரை நீட்டித்து வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்.

வாழவே தகுதியில்லாத அளவிற்கு உக்ரைனின் பல நகரங்கள் போரால் உருக்குலைந்துள்ளது. இந்நிலையில் எல்லை நகரமான உக்ரைனின் பாக்முட் நகரம் ரஷ்யப் படைகளின் கைகளில் வீழும் நிலை ஏற்பட்டுள்ளது. இது நேர்ந்தால் உக்ரைனுக்குள் ரஷ்யாவிற்கான சாலை திறக்கப்பட்டு விடும் என உக்ரைன் அதிபர் கவலை தெரிவித்துள்ளார். பாக்முட் நகரை கைப்பற்றிவிட்டால் கிழக்கு உக்ரைனின் க்ரமட்டோர்ஸ்க், ஸ்லோவியன்ஸ்க் உள்ளிட்ட மற்ற நகரங்களுக்குள் ரஷ்யப் படைகள் மிக எளிதாக நுழைந்துவிட முடியும். அப்படி  நிலை ஏற்பட்டால் நிலைமை இன்னும் மோசமாகும். ஆனால் பாக்முட் நகரை கைப்பற்றுவதில் ரஷ்யப்படைகள் மிகத் தீவிரம் காட்டி வருகிறது. எந்த விலை கொடுத்தாவது பாக்முட் நகரை கைப்பற்ற வேண்டும் என ராணுவ அதிகாரிகளுக்கு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கோய் சொய்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதே சமம் ரஷ்யப்படைகளை தடுப்பதற்காக உக்ரைன் ராணுவமும் தயாராக உள்ளது. பாக்முட் நகரில் தங்கள் ராணுவம் தாயாராக இருப்பதாகவும் எப்படியும் ரஷ்யாவின் ஊடுருவலை தங்களது ராணுவம் தடுக்கும் என தான் நம்புவதாகவும் அதிபர் ஜெலன்கி கூறியுள்ளார்.

ஓராண்டுகளாக நடைபெற்று வரும் போரால் இதுவரை 80 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், பல பட்சம் பேர் உக்ரைனைவிட்டு புலம் பெயர்ந்துள்ளதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு என்னதான் ஆயுத உதவி செய்து வந்தாலும் பொருளாதார ரீதியாக உக்ரைன் மிகப்பெரிய சேதத்தை சந்தித்துள்ளது. அங்குள்ள உட்கட்டமைப்பு முற்றிலும் சிதைக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலக கட்டிடங்கள், மருத்துவமனைகள், பள்ளிக் கட்டிடங்கள், சாலைகள் மின்சார நிலையங்கள் என அனைத்துமே தரைமட்டமாகியுள்ளன. சில இடங்களில் அணைகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.  அவற்றை மீட்டெடுக்க உக்ரைன மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியதாக இருக்கும். ஆனாலும் போர் எப்போது முடிவிற்கு வரும் என்பது தான் தெரியவில்லை.

First published:

Tags: Russia - Ukraine, Vladimir Putin, War