Home /News /international /

ரஷ்யா எதிர்ப்பு கூட்டணியை உருவாக்கும் உக்ரைன் அதிபர் வோலோடைமிர் செலன்ஸ்கி

ரஷ்யா எதிர்ப்பு கூட்டணியை உருவாக்கும் உக்ரைன் அதிபர் வோலோடைமிர் செலன்ஸ்கி

 பிரான்ஸ், அமெரிக்கா, துருக்கி நாடுகளின் தலைவர்களை தொடர்பு கொண்டு பேசி, தங்களுக்கு தேவையான ராணுவ உதவிகளை அளிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

பிரான்ஸ், அமெரிக்கா, துருக்கி நாடுகளின் தலைவர்களை தொடர்பு கொண்டு பேசி, தங்களுக்கு தேவையான ராணுவ உதவிகளை அளிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

பிரான்ஸ், அமெரிக்கா, துருக்கி நாடுகளின் தலைவர்களை தொடர்பு கொண்டு பேசி, தங்களுக்கு தேவையான ராணுவ உதவிகளை அளிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கியுள்ள நிலையில் அந்நாட்டிற்கு எதிரான சர்வதேச கூட்டமைப்பை உக்ரைன் அதிபர் வோலோடைமிர் செலன்ஸ்கி உருவாக்கி வருகிறார்.

சோவியத் யூனியனில் அங்கம் வகித்த உக்ரைன் நாடு தற்போது, அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும் நேட்டோ அமைப்புடன் இணைவதற்கான வேலைகளை செய்து வருகிறது. உக்ரைனின் இந்த நடவடிக்கை அண்டை நாடான ரஷ்யாவின் பாதுகாப்புக்கு மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று கருதி, ரஷ்யா தாக்குதலை நடத்தி வருகிறது.

முன்னதாக ரஷ்யாவுடன் பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தின. இருப்பினும் திடீரென போரை நடத்தி உலக நாடுகளை ரஷ்யா அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த விவகாரத்தில் இந்தியா தலையிட்டு ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி வலியுறுத்தியிருந்தார்.

இதையும் படிங்க - உக்ரைன் நிலவரம், இந்தியர்கள் பாதுகாப்பு குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆய்வு

இந்நிலையில் ரஷ்யாவுக்கு எதிரான சர்வதேச கூட்டணியை உருவாக்குவதில் உக்ரைன் அதிபர் தீவிரம் காட்டி வருகிறார். இதுதொடர்பாக அவர் பிரான்ஸ், அமெரிக்கா, துருக்கி நாடுகளின் தலைவர்களை தொடர்பு கொண்டு பேசி, தங்களுக்கு தேவையான ராணுவ உதவிகளை அளிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

முன்னதாக உக்ரைனை பாதுகாக்க யாரெல்லாம் விரும்புகிறார்களோ அவர்கள் அனைவருக்கும் ஆயுதம் அளிக்கப்படும் என்று தங்கள் நாட்டு குடி மக்களிடம் செலன்ஸ்கி கூறியிருந்தார். நாஜிக்களின் ஆட்சிக் காலத்தில் ஜெர்மனியில் நடந்ததை போன்ற தாக்குதலை தற்போது ரஷ்யா நடத்தியிருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதையும் படிங்க - Exclusive : ''எங்கு செல்வதென்றே தெரியவில்லை'' உக்ரைனில் சிக்கிய கோவை மாணவி பிரத்யேக பேட்டி

உக்ரைன் அதிபர் தனது சமீபத்திய ட்விட்டர் பதிவில், 'ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு படைகள் செர்னோபில் அணு உலையை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு முயற்சி மேற்கொண்டு வருகின்றன. எங்களது வீரர்கள் உயிரைக் கொடுத்து ரஷ்யாவுக்கு எதிராக போராடி வருகிறார்கள். 1986-ல் நடந்த துயரச் சம்பவம் போன்ற எதுவும் தற்போது நடைபெற்று விடக் கூடாது என்பதில் நாங்கள் கவனமாக உள்ளோம். ரஷ்யாவின் நடவடிக்கையை நாங்கள் எங்களுக்கு எதிரானதாக பார்க்கவில்லை. மாறாக இது ஐரோப்பாவுக்கு எதிரான நடவடிக்கையாகும்' என்று கூறியுள்ளார்.
Published by:Musthak
First published:

Tags: Russia - Ukraine

அடுத்த செய்தி