உக்ரைன் மீது ரஷ்ய படைகள் மூன்றாவது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. , உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன. உக்ரைனும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் அங்கே பதற்றமான சூழல் நிலவிவருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ்-வை ரஷ்ய படைகள் சுற்றி வளைத்துள்ளன.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தாலும், சீனா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில், நாட்டு மக்களிடம் காணொலி வாயிலாக உரையாற்றிய உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, உக்ரைன் தலைநகர் கீவ் மீது இருமுனை தாக்குதல் நடத்தப்படுவதாக கவலை தெரிவித்தார்.
ரஷ்யாவின் முதல் இலக்காக, தான் இருப்பதாகவும், தனது குடும்பத்தை கொல்வதற்கும் ரஷ்யா திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். போரில் தாங்கள் தனித்து விடப்பட்டிருப்பதாக வேதனையுடன் குறிப்பிட்ட செலன்ஸ்கி, தங்களுடன் இணைந்து போர் புரிவதற்கு யாரும் தயாராக இல்லை என்றும் தெரிவித்தார்.
நேட்டோ அமைப்பில் சேருவதற்கு யார் உத்தரவாதம் அளிப்பார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், இவ்விவகாரத்தில் அனைவரும் பயப்படுவதாகவும் கூறினார். உலக நாடுகள் ரஷ்யா மீது, மேலும் பல பொருளாதார தடைகளை விதிக்கவும் உக்ரைன் அதிபர் அழைப்பு விடுத்தார்.
Read More : ரஷ்யாவிற்கு எதிரான ஐ.நா. தீர்மானம் தோல்வி.. வாக்களிக்காமல் நடுநிலை வகித்த இந்தியா
இந்நிலையில், தற்போது வரை செலன்ஸ்கி பாதுகாப்பாக இருப்பதாகவும், உக்ரைனில் உள்ள நண்பர்களின் பாதுகாப்பு மீது தாங்கள் அக்கறை கொண்டுள்ளதாகவும், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்தார். அதேசமயம், நட்பு நாடுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் நேட்டோ அமைப்பு படைகளை குவித்துள்ளது. உக்ரைனில் நிலவும் சூழலை தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
Must Read : உக்ரைன் விவகாரம்: ரஷ்யாவுக்கு எதிராக சைபர் போரை தொடங்கிய ஹேக்கர்கள்...
உக்ரைன் மீதான தாக்குதலை கண்டித்து அமெரிக்க, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ஜி7 கூட்டமைப்பும் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதிக்க திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில், மேற்கத்திய நாடுகள் மீது, பொருளாதார தடைகளை விதித்து ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். இதனால், உலோகங்கள் உள்ளிட்ட முக்கிய மூலப்பொருட்களுக்கு, ரஷ்யாவையே நம்பியுள்ள மேற்கத்திய நாடுகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
உக்ரைனில் வாழும் தமிழர்கள் உதவிக்கு தொடர்பு கொள்ள
உதவி எண் : +91 9940256444 / +91 9600023645, 044-2851 5288
மின்னஞ்சல் : nrtchennai@tn.gov.in / nrtchennai@gmail.com
வலைதளம் : https://nrtamils.tn.gov.in
Facebook : https://www.facebook.com/nrtchennai1038
Twitter : @tamiliansNRT
மத்திய வெளியுறவுத்துறை உதவி எண்கள்:
1800118797 (Toll free)
+91-11-23012113, +91-11-23014104, +91-11-23017905
மின்னஞ்சல்: situationroom@mea.gov.in
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Russia, Russia - Ukraine