Home /News /international /

''ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும்'' - உலக நாடுகளுக்கு உக்ரைன் அதிபர் வலியுறுத்தல்

''ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும்'' - உலக நாடுகளுக்கு உக்ரைன் அதிபர் வலியுறுத்தல்

உக்ரைன் - ரஷ்யா

உக்ரைன் - ரஷ்யா

வரும் நாட்களில் போர் இன்னும் தீவிரம் அடையலாம். அதனை சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம். - ஜெலன்ஸ்கி

ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என்று உலக நாடுகளை உக்ரை அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.

ஒன்றரை மாதத்திற்கும் மேலாக உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் நடத்தி வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், சுமார் 40 லட்சத்திற்கும் அதிகமானோர் அகதிகளாக வெளியேறியுள்ளனர்.

ரஷ்யா எல்லையை ஒட்டியுள்ள உக்ரைன் நகரங்கள் மக்கள் நடமாட்டமின்றி காட்சியளிக்கிறது. இந்த விவகாரத்தில் ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்பட பல உலக நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

இந்நிலையில் உக்ரைன் நிலவரம் குறித்து செய்தியாளர்களுக்கு அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி விளக்கம் அளித்துள்ளார்.

அதில் அவர், ‘ரஷ்யா மிக மோசமான தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் ஏற்படும் அழிவுகள் தவிர்க்க முடியாது. ஆனால் உக்ரைனின் தாக்குதலால் ரஷ்யா பின்னடைவை சந்திக்கிறது.

இதையும் படிங்க - உக்ரைன் போர் எதிரொலி: ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா தற்காலிகமாக நீக்கம்!

தலைநகர் அருகே ரஷ்யா கைப்பற்றிய பகுதிகளை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது. இன்னும் கூடுதல் ராணுவத்தை உக்ரைனுக்கு எதிராக பயன்படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளது. என்ன நடந்தாலும் உக்ரைனை அவர்களால் கைப்பற்ற முடியாது.

இதுவரைக்கும் பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ஆனால் இவை போதாது. இன்னும் கூடுதலாக அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும். அதே நேரத்தில் உலக நாடுகள் உக்ரனின் தற்காப்பு நடவடிக்கைகளுக்கு கூடுதல் ஆயுதங்களை அளிக்க வேண்டும்.

இதையும் படிங்க - பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக தேர்வு செய்யப்பட எதிர்க்கட்சி தலைவர் ஷபாஸ் ஷரீபிற்கு அதிக வாய்ப்பு...

இன்னும் வரும் நாட்களில் போர் இன்னும் தீவிரம் அடையலாம். அதனை சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேரில் சந்தித்து பேசி பிரிட்டனின் ஆதரவை வழங்கினார்.
Published by:Musthak
First published:

Tags: Russia - Ukraine

அடுத்த செய்தி