Home /News /international /

'எங்களுக்கு இப்போது ஆயுதங்கள்தான் தேவை' - அமெரிக்காவின் உதவியை நிராகரித்த உக்ரைன் அதிபர்

'எங்களுக்கு இப்போது ஆயுதங்கள்தான் தேவை' - அமெரிக்காவின் உதவியை நிராகரித்த உக்ரைன் அதிபர்

ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு அமெரிக்கா உள்பட 15 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இந்தியா, சீனா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

உக்ரைன் அதிபரை பத்திரமாக மீட்க தேவையான உதவிகளை செய்து தருகிறோம் என்று அமெரிக்கா கூறியிருந்த நிலையில், தங்களுக்கு இப்போது ஆயுதங்கள்தான் தேவை என்று கூறி உக்ரைன் அதிபர் வோலோடைமிர் செலன்ஸ்கி நிராகரித்துள்ளார்.

முன்களத்தில் நின்று அதிபர் செலன்ஸ்கி போராடி வருவதால், உக்ரைன் ராணுவ வீரர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். உக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ள நிலையில், வல்லரசு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்றவை உக்ரைனுக்கு சொல்லிக் கொள்ளும்படியான பெரிய உதவிகள் எதையும் செய்யவில்லை.

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கப்படும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறியிருந்த நிலையில், அவை உக்ரைனுக்குள் வந்து விட்டதா என்பது குறித்த எந்த தகவலும் இல்லை.

இதையும் படிங்க - உக்ரைன் ராணுவத்தை துவம்சம் செய்யத் தொடங்கிய ரஷ்யா... நவீன ஏவுகனைகள் மூலம் அதிரடி தாக்குதல்

ஆனால் மறு முனையில் ரஷ்யா நவீன ரக ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக ரஷ்ய ராணுவத்தினர், உக்ரைன் ராணுவத்தை குறிவைத்து தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னொரு பக்கம் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளும் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், உக்ரைன் அதிபரை பத்திரமாக மீட்பதற்கு தேவையான உதவிகள் செய்து தருவோம் என்று அமெரிக்கா தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதனை நிராகரித்துள்ள உக்ரைன் அதிபர் வோலோடைமிர் செலன்ஸ்கி, தங்களுக்கு சண்டையிட ஆயுதங்கள்தான் தற்போது வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க - உக்ரைன் மீது உக்கிர போர்: ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு நாடுகளில் போராட்டம்!

முன்னதாக ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்டது. இதனை ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்டுத்தி ரத்து செய்து விட்டது.

ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு அமெரிக்கா உள்பட 15 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இந்தியா, சீனா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

இதுகுறித்து கருத்து தெரிவித்த உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, 'ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் ஐநாவில் தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன. இது உலகம் எங்களுடன் இருப்பதை உணர்த்துகிறது. உண்மை எங்கள் பக்கம் உள்ளது. வெற்றியும் எங்கள் பக்கம் இருக்கும்' என்று கூறியுள்ளார்.

உக்ரைன் விவகாரத்தை பொருத்தளவில் வல்லரசு நாடான ரஷ்யாவும், வளர்ந்து வரும் நாடான உக்ரைனும் விடாப்பிடியாக செயல்படுகின்றன. இதனால் எத்தகைய இழப்புகளை இவ்விரு நாடுகளும், உலகமும் சந்திக்கும் என்பதை சர்வதேச வல்லுனர்களால் கணிக்கமுடியவில்லை.
Published by:Musthak
First published:

Tags: Russia - Ukraine

அடுத்த செய்தி