உக்ரைனில் உள்துறை அமைச்சகத்தின் முக்கிய தலைவர்கள் சென்ற ஹெலிகாப்டர் தலைநகர் கீவ் அருகில் உள்ள மழலையர் பள்ளி பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி (Denys Monastyrskyi) மற்றும் 3 குழந்தைகள் உட்பட 18 பேர் பலியாகியுள்ளனர். மேலும் இதில் 15 குழந்தைகள் உட்பட 29 பேர் காயமடைந்துள்ளனர்.
உக்ரைனின் தலைநகர் கீவ்-வில் மேற்கு பகுதியில் உள்ள ப்ரோவரி என்ற பகுதியில் உள்துறை அமைச்சர் சென்ற ஹெலிகாப்டர் திடீரென கட்டுபாட்டை இழந்து பள்ளி வாளகத்திற்கு அருகில் விழுந்துள்ளது. அதில் ஹெலிகாப்டரில் பயணித்த உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி (Denys Monastyrskyi,42), துணை அமைச்சர் யெவ்என் இயனின்(Yevhen Yenin) மற்றும் உள்துறை அமைச்சகத்தின் மாநிலச் செயலாளர் யூரி லுப்கோவிச் (Yurii Lubkovych) ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் பள்ளி வளாகத்தில் இருந்த 3 குழந்தைகள் உட்பட 18 பேர் பலியாகியுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 9 பேர் ஹெலிகாப்டரில் பயணித்தவர். மீதம் 9 பேர் ஹெலிகாப்டர் விழுந்த இடத்தில் இருந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் இது விபத்தாகத்தான் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா உக்ரைன் இடையே கடந்த 11 மாதங்களாகப் போர் நடைபெற்று வரும் தருணத்தில் இந்த விபத்தில் உயிரிழந்த தலைவர்களின் இழப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோர விபத்தில் 15 குழந்தைகள் உட்பட 29 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பே ரஷ்யாவில் தாக்குதலில் 45 பேர் உயிரிழந்த நிலையில் குழந்தைகள் உட்பட பெரும் தலைவர்கள் இறந்த சம்பவம் உக்ரைனில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Accident, Helicopter Crash, Russia - Ukraine