ஹோம் /நியூஸ் /உலகம் /

ரஷ்யா தாக்குதலால் மின் பற்றாக்குறை... வெளியேறும் மக்கள்- போரால் தவிக்கும் உக்ரைன்

ரஷ்யா தாக்குதலால் மின் பற்றாக்குறை... வெளியேறும் மக்கள்- போரால் தவிக்கும் உக்ரைன்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

ரஷ்யா நடத்திவரும் தாக்குதலால் உக்ரைன் நாட்டில் தேசிய அளவிலான மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • international, IndiaUkraineUkraine

ரஷ்யா உக்ரைன் போர் கடந்த 8 மாதங்களாக நடந்துகொண்டு இருக்கும் நிலையில் தற்போது உக்ரைன் தேசிய அளவிலான மின் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகின்றது.

வெள்ளி அன்று இரவு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நாட்டு மக்களுக்கு வெளியிட்ட அறிக்கையில், மின் உற்பத்தி மையங்களில் ரஷ்யா நடத்திய தாக்குதலை அடுத்து மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மக்கள் காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை மின்சாரத்தைக் குறைந்த அளவில் உபயோகிக்கக் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் ரஷ்யத் தாக்குதலில் சேதமடைந்த மின் ஆற்றல் நிலையங்களை சீரமைக்கும் காரணத்தினால் மின்சார வினியோகத்தை குறைக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளனர். ரஷ்யா- உக்ரைன் போர் தொடங்கிய நாட்களிலிருந்து தேசிய அளவில் மின்சார குறைபாடு ஏற்படுவது இதுவே முதல் முறையாகும்.

உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் பெரிய நகரமான கார்கிவ் பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பிற்கான சரியான நேரம் அறிவிக்கப்படாத நிலையில் மின்சாரத்தில் இயங்கும் போக்குவரத்து சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களும் இடம்பெற்றுள்ளன.

உக்ரைனின் வடகிழக்கு பகுதியில் ரஷ்யாவின் எல்லையில் அமைந்துள்ள சுமி பிராந்தியத்தில் காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை மின்சாரம் முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய தேவையான தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

Also Read : தலைவரின் புகழ் பாட மறுப்பு... ஈரானில் 15 வயது பள்ளி மாணவியை அடித்துகொன்ற போலீஸ்

கடந்த வாரங்களில் ரஷ்யாவின் தாக்குதலில் 30% மின்சார நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமையை சரிசெய்ய நேரம் தேவைப்படுவதால் மக்களை மின்சாரத்தில் செயல்படும் கருவிகளை பயன்படுத்துவதை குறைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதனிடையே, போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் உக்ரைனில் உள்ள இந்தியர்களை உடனடியாக வெளியேற இந்திய அரசும் அறிவிப்பு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

First published:

Tags: Electricity, Russia - Ukraine