ஹோம் /நியூஸ் /உலகம் /

ரஷ்ய ராணுவத்திடம் சிக்கிய உக்ரைன் வீரரின் பரிதாப நிலை.. புகைப்படம் வெளியிட்டு உக்ரைன் ராணுவம் கண்டனம்!

ரஷ்ய ராணுவத்திடம் சிக்கிய உக்ரைன் வீரரின் பரிதாப நிலை.. புகைப்படம் வெளியிட்டு உக்ரைன் ராணுவம் கண்டனம்!

உக்ரைன் வீரர்

உக்ரைன் வீரர்

ரஷ்ய ராணுவத்தினரால் பெரும் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விடுவிக்கப்பட்ட உக்ரைன் வீரரின் அதிர்ச்சிக்குரிய புகைப்படத்தை உக்ரைன் ராணுவம் வெளியிட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • inter, IndiaKyivKyivKyivKyivKyiv

  உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24ம் தேதி போர் தொடுத்தது. 7 மாதங்கள் கடந்த நிலையில் போர் முடிவுக்கு வரவில்லை. போரின் தொடக்கத்தில் ரஷ்யாவிற்கு வெற்றிகள் கிடைத்தாலும், கடந்த சில நாட்களாக அந்நாடு பின்னடைவை சந்தித்து வருகிறது. இந்த போர் காரணமாக ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் பொருளாதார தடையும் விதித்துள்ளதால், பொருளாதார ரீதியாகவும் அந்நாடு பாதிப்பை சந்தித்து வருகிறது. அதேபோல், உக்ரைன் நாட்டிலும் ராணுவ மற்றும் பொருளாதார ரீதியான பாதிப்புகள் தொடர்ந்து எதிரொலித்த வண்ணம் உள்ளன.

  குறிப்பாக போரில் நிகழ்ந்த மனித உரிமை மீறல் தொடர்பான தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. ரஷ்யா விட்டுச் சென்ற பல பகுதிகளில் பலரின் உயிர்கள் புதைக்கப்பட்ட அதிர்ச்சி செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், போரில் ரஷ்ய ராணுவத்திடம் சிக்கிக் கொண்ட உக்ரைன் ராணுவ வீரர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்ட அவல நிலை குறித்து உக்ரைன் ராணுவமே வருத்தத்துடன் பதிவு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட அந்த வீரரின் பெயர் மைகிலோ தினாவோ. இவர் ரஷ்ய ராணுவத்தினரால் மூன்றாம் தர சித்தரவாதைக்கு ஆளாக்கப்பட்டு, தற்போது பரிதாபத்திற்குரிய நிலையில் எலும்பும் தோலுமாக உள்ளார். இவரது கை, கால், முகம் என அனைத்து பகுதிகளிலும் பெரும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இவரின் கைகளில் ஆணியை செலுத்தி கொடிய சித்தரவாதைகளை செய்துள்ளனர்.

  இதன் காரணமாக கை பகுதியில் இவருக்கு 4 செ.மீ எலும்பு இல்லாமல் போனது. தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் இந்த உடம்பை வைத்துக்கொண்டு அறுவை சிகிச்சை செய்வது உயிருக்கே ஆபத்தாய் முடிந்து விடும் என எச்சரித்துள்ளனர் . முதலில் இவர் உடல் எடையை அதிகரித்தபின்னரே மற்ற அறுவை சிகிச்சைகள் எல்லாம் மேற்கொள்ளப்படும் என்றுள்ளனர்.

  ஆனால், எது எப்படியோ ரஷ்யா ராணுவம் மிக்கலோவை உயிருடன் விட்டதே நிம்மதியை தருகிறது. அந்த வகையில் அவர் அதிர்ஷ்டம் மிக்கவர் என்று சொல்லி அவரது குடும்பத்தினர் மனதை தேற்றிக்கொள்கின்றனர்.

  இதையும் படிங்க: அமெரிக்க ரகசியங்களை அம்பலப்படுத்திய எட்வெர்ட் ஸ்னோடெனுக்கு ரஷ்ய குடியுரிமை.. அதிபர் புதின் அறிவிப்பு

  இவர் வீரராக முன்பிருந்த புகைப்படத்தையும் தற்போதைய புகைப்படத்தையும் வெளியிட்ட உக்ரைன் ராணுவம், "ஜெனிவா ஒப்பந்தத்தை சிறிதும் மதிக்காமல் ரஷ்யா தனது நாஜி தனமான வேலையை தொடர்ந்து செய்து வருகிறது. இது வெட்கக்கேடு" என விமர்சித்துள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Russia - Ukraine, War