Home /News /international /

உக்ரைன் மீது இன்னும் சில நாட்களில் ரஷ்யா தாக்குதல் நடத்தலாம்: அமெரிக்க அதிபர் எச்சரிக்கை

உக்ரைன் மீது இன்னும் சில நாட்களில் ரஷ்யா தாக்குதல் நடத்தலாம்: அமெரிக்க அதிபர் எச்சரிக்கை

கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும், உக்ரைன் ராணுவத்துக்கும் இடையே மோதல் தொடங்கியுள்ளது.

கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும், உக்ரைன் ராணுவத்துக்கும் இடையே மோதல் தொடங்கியுள்ளது.

கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும், உக்ரைன் ராணுவத்துக்கும் இடையே மோதல் தொடங்கியுள்ளது.

    உக்ரைன் மீது இன்னும் சில நாட்களில் ரஷ்யா தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார். இந்நிலையில், உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் பணி தொடங்கியுள்ளது.

    ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை இருந்து வரும் நிலையில், அண்மையில் ரஷ்யா போர் பயிற்சி மேற்கொண்டது. மேலும், உக்ரைன் எல்லையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை ரஷ்யா குவித்ததால், போர் பதற்றம் உருவானது. இந்த விவகாரத்தில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தலையிட்டதால் ஒருசில படைகளை திரும்ப பெற்றதாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், உக்ரைன் எல்லைப்பகுதியில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் முதல், ஒரு லட்சத்து 90 ஆயிரம் வீரர்களை ரஷ்யா தயார் நிலையில் நிறுத்தியுள்ளதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

    இந்நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகையில் உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் பதற்றம் குறித்து, அதிபர் ஜோ பைடன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் பைடன், இன்னும் சில நாட்களில் உக்ரைனின் கீவ் நகரில் ரஷ்யா தாக்குதல் நடத்தலாம் என தங்களது உளவுத்துறை தெரிவித்துள்ளதாகவும், அங்கு சுமார் 30 லட்சம் பேர் வசிப்பதாகவும் கூறினார்.

    இதையும் படிங்க - பூக்கள் பூக்காததால் தோட்டக்காரர்களை வதை முகாமிற்கு அனுப்பிய கிம் ஜாங்- உன்

    உக்ரைனுக்கு அமெரிக்கா போதிய உதவிகளை வழங்கும் என்றும் தெரிவித்தார். உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா தயாராக உள்ளதாக தெரிவித்த பைடன், பதற்றத்தை ஏற்படுத்தாமல், சமரசமாக செல்ல ரஷ்யா முயற்சிக்கலாம் எனவும் குறிப்பிட்டார்.

    இதற்கிடையே, கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும், உக்ரைன் ராணுவத்துக்கும் இடையே மோதல் தொடங்கியுள்ளது. டோனட்ஸ்க் நகரில் காரில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததாகவும், எனினும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில் கிழக்கு உக்ரைனில் டோனட்ஸ்க் மக்கள் குடியரசு என்ற கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் பணி தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக ஆதரவற்றோர் இல்லங்களில் தங்கி படித்து வரும் சிறுவர்கள், பேருந்துகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். மேலும் பலர் குடும்பத்துடன் டோனட்ஸ்க் நகரை காலி செய்து வருவதால், அங்குள்ள பெட்ரோல் நிலையங்களில் கார்கள் நீண்ட தூரத்துக்கு காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    டோனட்ஸ்க் நகரில் இருந்து மட்டும் ஏழு லட்சம் பேரை, ரஷ்யாவுக்கு அனுப்ப கிளர்ச்சியாளர்கள் அமைப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: America, Russia

    அடுத்த செய்தி