Home /News /international /

ரஷ்யாவின் தாக்குதல் முடிவுக்கு வருமா? பெலாரஸில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உக்ரைன் சம்மதம்

ரஷ்யாவின் தாக்குதல் முடிவுக்கு வருமா? பெலாரஸில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உக்ரைன் சம்மதம்

பேச்சுவார்த்தை நடத்தப்படும் போது, நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேரக்கூடாது என்று ரஷ்யா முக்கிய நிபந்தனை விதிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெலாரஸ் நாட்டில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்கு உக்ரைன் சம்மதம் தெரிவித்துள்ளது. இதனால் அந்நாட்டின் மீதான தாக்குதல் முடிவுக்கு வருமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முன்னதாக, பெலாரஸ் நாடு ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று கூறி, பேச்சுவார்த்தையில் பங்கேற்க உக்ரைன் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பேச்சுவார்த்தையின் முக்கியத்துவம் கருதி உக்ரைன் தரப்பில் பங்கேற்பதற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெலாரஸ் - உக்ரைன் எல்லையில் உள்ள கோமல் பிராந்தியத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் தரப்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் பிரதிநிதிகள் தயார் நிலையில் இருப்பதாகவும், உக்ரைன் பிரதிநிதிகளின் வருகைக்காக காத்திருப்பதாகவும் ரஷ்ய அரசு கூறியுள்ளது.

இதையும் படிங்க - உக்ரைனில் உள்ள இந்தியர்கள் செய்ய வேண்டியவை என்ன? அறிவிப்பை வெளியிட்டது இந்திய தூதரகம்

முன்னதாக ரஷ்ய அதிபர் புதினுடன் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் போனில் தொடர்பு கொண்டு போர் நிறுத்தம் குறித்து பேசியுள்ளார். இதன்பின்னர், உக்ரைன் பிரதமர் வோலோடைமிர் செலன்ஸ்கியுடனும் பெலாரஸ் அதிபர் பேசி, போர் நிறுத்தத்தின் அவசியம், பிராந்தியத்தில் அமைதி நிலவ வேண்டியதின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்துள்ளார்.

இதையும் படிங்க - ரஷ்ய அதிபரிடமிருந்து ஜூடோ அமைப்பின் கவுரவ தலைவர் பதவி பறிப்பு

இதன் தொடர்ச்சியாக உக்ரைன் பிரதமர் வோலோடைமிர் செலன்ஸ்கி உக்ரைன் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்த சம்மதம் தெரிவித்து இருக்கிறார். பேச்சுவார்த்தை நடத்தப்படும் போது, நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேரக்கூடாது என்று ரஷ்யா முக்கிய நிபந்தனை விதிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உக்ரைனில் கடந்த வியாழக்கிழமையில் இருந்து ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 200-க்கும் அதிகமான உக்ரைன் மக்கள் உயிரிழந்துள்ளனர்.

போர் நிலவுவதால் உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை இந்தியா கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆபரேஷன் கங்கா என்று பெயரிடப்பட்டு மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
Published by:Musthak
First published:

Tags: Russia - Ukraine

அடுத்த செய்தி