ராவணனைக் கொன்றதுபோல் கொரோனா அரக்கனை இங்கிலாந்து அழிக்கும் - பிரதமர் போரிஸ் ஜான்சன் தீபாவளி செய்தி

பிரதமர் போரிஸ் ஜான்ஸன்

ராமரும், சீதையும் ராவணனைக் கொன்றது போல் கொரோனா என்ற அரக்கனை இங்கிலாந்து அழிக்கும் என அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரால் கொண்டாடப்படும் தீபாவளி திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் போரிஸ் ஜான்சன், இருள் அகன்று ஒளி பிறப்பதை தீபாவளி நமக்கு கற்பிப்பது போல, கொரோனா என்ற இருளை விரைவில் நாம் விரட்டுவோம் என கூறினார்.

  கொரோனாவை நிச்சயம் வெல்வோம் எனவும், போரிஸ் ஜான்சன் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், ராமரும் சீதையும் ராவணனைக் கொன்றது போல் கொரோனா என்ற அரக்கனை இங்கிலாந்து அழிக்கும் என அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.  கொரோனா பரவல் காரணமாக இங்கிலாந்தில் பிறப்பிக்கப்பட்ட இரண்டாம் கட்ட ஊரடங்கு டிசம்பர் 2ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தீபாவளி கொண்டாட்டம் நடைபெறவுள்ள சமயம் இப்படியான சூழல் ஏற்பட்டிருப்பது சிரமமாகவே இருக்கும் என்று போரிஸ் ஜான்சன் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
  Published by:Rizwan
  First published: