குளிரூட்டப்பட்ட ட்ரக்கில் 39 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட வழக்கு... லண்டன் நீதிமன்றத்தில் தீர்ப்பு

குளிரூட்டப்பட்ட ட்ரக்கில் 39 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட வழக்கு... லண்டன் நீதிமன்றத்தில் தீர்ப்பு

குளிரூட்டப்பட்ட ட்ரக் (Reuters Photo)

கிழக்கு இங்கிலாந்தின் கிரேஸ் நகரில் குளிரூட்டப்பட்ட ட்ரக்கில் 39 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் மீதான அனைத்து குற்றங்களும் நிரூபிக்கப்பட்டிருப்பதாக எஸ்ஸெக்ஸ் போலீசார் தெரிவித்தனர்.

 • Share this:
  கடந்த ஆண்டு அக்டோபரில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் உயிரிழந்த 39 பேரும் வியட்நாமை சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டது. அவர்கள் இங்கிலாந்துக்குள் சட்டவிரோதமாக நுழைய ஆபத்தான இந்த பயணத்தை மேற்கொண்டதும், கடத்தல்காரர்களுக்கு பணம் கொடுத்ததும் இவ்வழக்கு விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

  இந்த வழக்கில் டிரக் ஓட்டுநரான மாரிஸ் ராபின்சன், உட்பட பலர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். ருமேனியா நாட்டைச் சேர்ந்த ஜியோர்கா நிகா என்பவர் இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

  வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவர் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டு விட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்களுக்கான தண்டனை விவரங்களை லண்டன் மத்திய குற்றவியல் நீதிமன்றம் பின்னர் அறிவிக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

     உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

   
  Published by:Sankaravadivoo G
  First published: