"பீட்சா பார்ட்டியில் சேர்த்துக்கொள்ளவில்லை" என வழக்கு - ஊழியருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பார்ட்டியில் சேர்த்துக் கொள்ளவில்லை எனக் கூறி வழக்கு தொடர்ந்த முன்னாள் பெண் ஊழியருக்கு இங்கிலாந்து நீதிமன்றம் 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் உத்தரவிட்டுள்ளது.

பார்ட்டியில் சேர்த்துக் கொள்ளவில்லை எனக் கூறி வழக்கு தொடர்ந்த முன்னாள் பெண் ஊழியருக்கு இங்கிலாந்து நீதிமன்றம் 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் உத்தரவிட்டுள்ளது.

  • Share this:
இங்கிலாந்தின் வாட்போர்டு (Watford) நகரில் ஃபோர்டு நிறுவனத்தின் டீலரான ஹார்ட்வெல் (Hartwell) கம்பெனி செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தில் லெவிக்கா (Lewicka) என்ற பெண் வரவேற்பாளராக பணியாற்றி வந்துள்ளார். அவர் பணியாற்றியபோது நிறுவனத்தில் நடத்தப்பட்ட பீட்சா பார்டிகளுக்கு அழைக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இங்கிலாந்து உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் உள்ள மிகப்பெரிய நிறுவனங்களில் வாரம்தோறும் இதுபோன்ற சிறிய அளவிலான பார்ட்டிகள் நடைபெறுவது வழக்கம்.

தொடர்ந்து அந்தப் பார்ட்டிகளில் இருந்து புறக்கணிக்கப்பட்டதால், மனமுடைந்த அந்தப் பெண் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவருக்கு ஊதியம், வேலை பார்க்கும் நேரத்தில் பிரச்சனை இருந்ததாகவும், கூடுதலாக பாலியல் பாகுபாடு காட்டப்பட்டதாகவும் வழக்கில் தெரிவித்துள்ளார். நிறுவனத்தில் நடைபெறும் பார்ட்டிகளில் அழைக்கப்பட்டது குறித்து முறையிட்டபோது, யாரும் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறிய அவர், புகார் எழுப்பப்பட்ட பிறகு மேலும் தனிமைப்படுத்தப்பட்டதாக கூறினார்.

இதனை விசாரித்த நீதிமன்றம் 2018 ஆம் ஆண்டு ஊழியர்களை எழுத்துப்பூர்வமாக எச்சரித்தது. ஆனால், மீண்டும் அலுவலகத்தில் இதேபோன்றதொரு பாகுபாடு காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, நீதிமன்றம் எச்சரிக்கைக்குப் பிறகு சக ஊழியர்கள் யாரும் பேசவில்லை, தொலைபேசியில் அழைத்தால் பதில் அளிப்பதில்லை போன்ற சிக்கல்களை அவர் சந்தித்துள்ளார்.

ALSO READ : இன்ஸ்டாகிராம் Live-ல் பதிவான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்!

ஹார்ட்வெல் பகுதியில் செயல்பட்டு வந்த கம்பெனி வளாகம் டீலர்ஷிப் விஷயமாக 2014 ஆம் ஆண்டு மூடப்பட்டு ஹெமல் ஹெம்ஸ்டெட் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அங்கு முழு நேரம் அவர் பணி செய்ய வேண்டும் என நிறுவனம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளார். ஆனால், தனக்கான பணி நேரத்தில் உடன்பாடு இல்லாத அவர், 2019 ஆம் ஆண்டு மீண்டும் நீதிமன்றத்தை நாடியுள்ளார். அப்போதும் தனக்கு நேர்ந்த அவமானங்கள் குறித்து சாட்சிகளை நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளார்.

லெவிக்காவின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த கம்பெனி, லெவிக்கா பகுதிநேர ஊழியர் மட்டுமே என்பதால் அவரை பார்ட்டிகளுக்கு அழைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது. மதியம் 1 மணி வரை மட்டுமே பணியாற்றியதாகவும், அதனால் வெள்ளிக்கிழமை மாலை நடைபெறும் பார்ட்டிகளுக்கு அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என விளக்கம் கொடுத்தது. ஆனால், புதிதாக இடம் மாற்றம் செய்யப்பட்ட நிறுவனத்தில் அனைத்து பார்ட்டிகளுக்கும் லெவிக்காவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது குறித்தும், அதற்கான ஆதாரங்களையும் காட்டி நிறுவனத்திடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

ALSO READ : கொரோனா பாதித்த இரண்டு உயிர்களை காப்பாற்றிய போலீஸ் அதிகாரி - குவியும் பாராட்டு!

ஹார்ட்வெல் நிறுவனம் உரிய பதில் அளிக்காததைத் தொடர்ந்து லெவிக்காவுக்கு 23,079 யூரோக்களை அபராதமாக நீதிபதி விதித்தார். மன உளைச்சல், ஊதிய இழப்பு ஆகியவற்றை கணக்கிட்டு இந்திய ரூபாயில் 20,50,699 லட்சம் இழப்பீடாக வழங்குமாறு ஹார்ட்வெல் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sankaravadivoo G
First published: