ரஷ்யாவை எதிர்த்து போரிடுவதற்கு நவீன ஆயுதங்களை உக்ரைனுக்கு பிரிட்டன் வழங்கவுள்ளது. அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை பிரிட்டன் பிரதமர் நேரில் சந்தித்து பேசி தனது ஆதரவை வழங்கியுள்ளார்.
போர்ப்பதற்றம் அதிகரித்துள்ள உக்ரைன் தலைநகர் கீவிற்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று சென்றார். அங்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன், கள நிலவரத்தை பார்வையிட்ட ஜான்சன், பின்னர் அவருடன் ஆலோசனை நடத்தினார்.
இதன் முடிவில் உக்ரைனுக்கு நவீன ஆயுதங்களை வழங்குவற்கு பிரிட்டன் முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக 120 ராணுவ ஆயுத வாகனங்கள் உக்ரைனுக்கு அளிக்கப்படுகிறது. மேலும், கப்பல்களில் இருந்து செலுத்தப்படும் ஏவுகனைகளை அழிக்கும் ஆயுதங்களும் வழங்கப்படுகின்றன.
இதையும் படிங்க - ''ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும்'' - உலக நாடுகளுக்கு உக்ரைன் அதிபர் வலியுறுத்தல்
முன்னதாக வெள்ளிக்கிழமையன்று விமானங்களில் இருந்து வீசப்படும் ஏவுகனைகளை அழிக்கும் ஏவுகனைகளும், தரையில் இருந்து வீசப்படும் ஏவுகனைகளை அழிக்கும் அமைப்புகளும் உக்ரைனுக்கு வழங்கப்படும் என்று பிரிட்டன் அறிவித்திருந்தது.ஆயுதங்களுடன் கூடுதலாக 50 கோடி யூரோ வழங்கப்படும் என்று போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். இது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 4,900 கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: யுத்த பூமியில் போரீஸ் ஜான்சன்.. உக்ரைன் கீவ் நகர தெருக்களில் நடந்து பார்வையிட்டார்...
பிரிட்டனின் அறிவிப்புகளை ஏற்றுக் கொண்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, மிக முக்கியமான உதவியை அளித்திருப்பதாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க - பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக தேர்வு செய்யப்பட எதிர்க்கட்சி தலைவர் ஷபாஸ் ஷரீபிற்கு அதிக வாய்ப்பு...
உக்ரைன் அதிபரை நேரில் சந்தித்ததை சிறப்பு மிக்கதாக கருதுகிறேன் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். இந்த சந்திப்பு முன்கூட்டியே திட்டமிடப்படாத திடீர் சந்திப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே ரஷ்யா மீது உலக நாடுகள் கூடுதல் பொருளாதார தடைகளை ஏற்படுத்த வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.