Home /News /international /

ICU - ல் இருப்பவர்களில் 90 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் - பிரிட்டன் பிரதமர்

ICU - ல் இருப்பவர்களில் 90 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் - பிரிட்டன் பிரதமர்

மாதிரி படம்

மாதிரி படம்

இந்தியாவிலும் ஒமைக்ரான் தாக்கம் கணிசமாக அதிகரித்துள்ளது. டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

    கொரோனா மற்றும் ஒமைக்ரான் சிகிச்சைக்காக அவசர சிகிச்சை பிரிவில் இருப்பவர்களில் 90 சதவீதம்பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

    பிரிட்டனில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிட்ட பிரதமர் போரிஸ் ஜான்சன், தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித் ஆறுதல் தெரிவித்தார். மேலும், கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துமாறு பிரிட்டன் உயர் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார். இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது-

    கொரோனா தடுப்பூசிகளை பிரிட்டன் மக்கள் அனைவரும் தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும். பெருந்தொற்றை எதிர்கொள்வதற்கு நம்மிடம் உள்ள பெரும் ஆயுதமே அதுதான். தொற்று பாதிப்புகளால் அவசர சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் சிலர் இருக்கிறார்கள். அவர்களை ஆய்வு செய்ததில் 90 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது.

    தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு வைரஸ் தாக்குதல் 8 மடங்கு அதிகமாக இருக்கும் என்று மருத்துவர்கள் என்னிடம் தெரிவித்தனர். இன்றைய தேதி வரையில் 3.25 கோடிப் பேர் பிரிட்டனில் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 24 லட்சம் பேர் 6 மாதத்திற்கு முன்பு 2 டோஸ்களை செலுத்தியுள்ளனர். அவர்கள் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்த முன்வர வேண்டும்.

    பிரிட்டனில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நிலைமை மோசமாக இருக்கும்போது, நம்முடைய கொண்டாட்டங்களை நிலைமையை ஆபத்தாக மாற்றி விடக் கூடாது. பிரிட்டனை பின்பற்றி சில ஐரோப்பிய நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

    Also Read : Omicron| டெல்டாவையும் மிஞ்சி விட்டது ஓமைக்ரான், பாதிப்பு கடுமையாக இருக்கும்- டாக்டர் ஃபாசி எச்சரிக்கை

    கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல்களை பிரிட்டன் அரசு துல்லியமாக கண்காணித்து வருகிறது. அரசு கூறும் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்தாலே நம்மால் பெருந்தொற்றுகளை வென்று விட முடியும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். ஐரோப்பிய நாடுகளில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக பிரிட்டன் உள்ளது. இடங்கு மட்டும் கொரோனா பாதிப்புகளால் 1 லட்சத்து 48 ஆயிரத்து 21 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

    Also Read : டெல்லியில் அமலானது மஞ்சள் எச்சரிக்கை - பள்ளி, ஜிம், திரையரங்குகள் மூடப்பட்டன!

    கொரோனா பாதிப்பு சுமார் ஒன்றரை ஆண்டுகளை கடந்த நிலையிலும், முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை. தற்போது உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

    இந்தியாவிலும் ஒமைக்ரான் தாக்கம் கணிசமாக அதிகரித்துள்ளது. டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அண்டை மாநிலமான கேரளாவில் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    Also Read : குறைப்பிரசவமான பெண்ணுக்கு கோடிக்கணக்கில் வந்த மருத்துவமனை பில் - அமெரிக்காவில் அதிர்ச்சி!
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Corona, Corona Vaccine

    அடுத்த செய்தி