Home /News /international /

இங்கிலாந்து அரசியலில் பிரதமர் லிஸ் டிரஸ் அதிரடி - மந்திரி சபையில் கருப்பு இனம் சேர்ந்தவர்களுக்கு முக்கிய பொறுப்பு

இங்கிலாந்து அரசியலில் பிரதமர் லிஸ் டிரஸ் அதிரடி - மந்திரி சபையில் கருப்பு இனம் சேர்ந்தவர்களுக்கு முக்கிய பொறுப்பு

இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் புதிய மந்திரி சபை அறிவிப்பு

இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் புதிய மந்திரி சபை அறிவிப்பு

புதிய மந்திரி சபையில் கருப்பு இனத்தைச் சேர்ந்தவர்களை, நிதி அமைச்சர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பிரதமர் லிஸ் டிரஸ் நியமித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • internationa, IndiaUnited KingdomUnited KingdomUnited Kingdom
    இங்கிலாந்தின் புதிய பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள லிஸ் டிரஸ் தற்போது அவரது மந்திரி சபையில் முக்கிய பதவிகளில் கருப்பு இனத்தைச் சேர்ந்த நபர்களை தேர்வு செய்துள்ளார். இங்கிலாந்து அரசியல் வரலாற்றில் முக்கிய அமைச்சர் பதவிகளில் வெள்ளை இனத்தவர்கள்   இடம்பெறாமல் கருப்பு இன மக்கள் இடம்பெருவது இதுவே முதல் முறை . 

    இங்கிலாந்தில் நடந்த தேர்தலில் கான்செர்வேவ் கட்சித் தலைவரும் நாட்டின் பிரதமருமான லிஸ் டிரஸ் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் பதவி பிராமணம் செய்து வைத்தார். இந்த நிலையில் அவர் மந்திரி சபையைத் தேர்வு செய்துள்ளார். அதில் கானா பகுதியிலிருந்து 1960களின் வந்தடைந்த வம்சாவளியைச் சேர்ந்த குவாசி குவார்டெங் என்றவரை இங்கிலாந்தின் முதல் கருப்பு இன நிதி அமைச்சராக நியமித்துள்ளார்.



    மேலும் வெளியுறவுத் துறை அமைச்சராகக் கருப்பு இனத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் கிலவர்லியை நியமித்துள்ளார். மேலும் கென்யாவின் இருந்து இங்கிலாந்து புலம்பெயர்ந்த வம்சாவளியைச் சேர்ந்த சுயெல்லா பிரேவர்மேன் என்ற பெண்மணியை உள்நாட்டுச் செயலராக தேர்ந்தெடுத்துள்ளார். இவர் காவல்துறை மற்றும் குடியேற்றம் போன்றவற்றைக் கவனித்துக்கொள்வார்.

    Also Read : வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கிய ரஷ்யா - அமெரிக்கா பரபரப்பு தகவல்.

    தற்போது அமைத்துள்ள இந்த மந்திரி சபை கான்செர்வேவ் கட்சியின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற மனப்பான்மையில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அரசியல் வரலாற்றில் வெறும் வெள்ளை இன நபர்கள் மட்டும் இடம்பெற்றுக்கொண்டு இருந்த நிலையில் 2002ம் ஆண்டு தான் முதல் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த பால் படேங்வை கருவூலத்தின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Janvi
    First published:

    Tags: Cabinet, Prime minister, Prime Minister Office, UK

    அடுத்த செய்தி