Home /News /international /

யுத்த பூமியில் போரீஸ் ஜான்சன்.. உக்ரைன் கீவ் நகர தெருக்களில் நடந்து பார்வையிட்டார்...

யுத்த பூமியில் போரீஸ் ஜான்சன்.. உக்ரைன் கீவ் நகர தெருக்களில் நடந்து பார்வையிட்டார்...

போரிஸ் ஜான்சன்

போரிஸ் ஜான்சன்

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அந்நாட்டுக்கு சென்ற முதல் சர்வதேச தலைவர் போரிஸ் ஜான்சன் ஆவார். போரிஸ் ஜான்சனின் இச்செயல் வரலாற்றில் இடம் பிடிக்கும் என்று ஜெலென்ஸ்கி செய்தியாளர் சந்திப்பின்போது குறிப்பிட்டார்.

    உக்ரைனுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்  உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி உடன் கீவ் நகர தெருக்களில் நடந்து பார்வையிட்டார்.

    நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24ம் தேதி படை  எடுத்தது. ஒரு மாதம் கடந்தும் தாக்குதல் நின்றபாடில்லை.  ரஷ்யா தாக்குதலில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் நிலை குலைந்துள்ளன. கட்டிடங்கள் தரைமட்டமாகி காணப்படுகின்றன. குழந்தைகள், பெண்கள் உட்பட ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.

    ரஷ்யா தரப்பிலும் அந்நாட்டு வீரர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. எனினும், இது தொடர்பாக ரஷ்யா அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிடவில்லை. உக்ரைன் -ரஷ்யா இடையேயான தாக்குதலை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நாடுகளுக்கு முயற்சி செய்துவருகின்றன. இந்தியா உள்ளிட்ட நாடுகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அறிவுறுத்தி வருகின்றன.

    இந்நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அதிரடியாக உக்ரைன் பயணம் மேற்கொண்டாஅர். போலாந்து சென்ற போரிஸ் அங்கிருந்து ரகசியமாக ரயில் மூலம் உக்ரைன் தலைநகர் கீவ் பகுதிக்கு சென்றார். அங்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி உடன் கீவ் நகரை அவர் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போரிஸ், உக்ரைனீய மக்கள் சிங்கத்தை போன்றவர்கள் என்று குறிப்பிட்டார்.

    இதையும் படிக்க: ரஷ்ய எல்லையில் நிரந்தரமாக படைகளை நிறுத்த நேட்டோ நாடுகள் முடிவு...

    ரஷ்யாவிற்கு எதிரான போருக்கு உதவ உக்ரைனுக்கு 120 ஆயுதம் தாங்கிய வாகனங்கள் மற்றும் புதிய கப்பல் எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகளை அனுப்புவதாக உறுதியளித்தார். உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அந்நாட்டுக்கு சென்ற முதல் சர்வதேச தலைவர் போரிஸ் ஜான்சன் ஆவார். போரிஸ் ஜான்சனின் இச்செயல் வரலாற்றில் இடம் பிடிக்கும் என்று ஜெலென்ஸ்கி செய்தியாளர் சந்திப்பின்போது குறிப்பிட்டார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Boris johnson, Russia - Ukraine, UK

    அடுத்த செய்தி