ஹோம் /நியூஸ் /உலகம் /

காரில் சீட் பெல்ட் அணியாத பிரிட்டன் பிரதமர்.. அபராதம் விதித்து காவல்துறை அதிரடி..!

காரில் சீட் பெல்ட் அணியாத பிரிட்டன் பிரதமர்.. அபராதம் விதித்து காவல்துறை அதிரடி..!

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்

காரில் சீட் பெல்ட் அணியாத குற்றத்திற்காக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • inter, IndiaLondonLondon

பிரிட்டன் நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் காரில் பயணித்த போது சீட் பெல்ட் அணியாத சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு லண்டன் பகுதியில் ரிஷி சுனக் தனது காரில் பின் சீட்டில் அமர்ந்தவாறு பயணித்தார். அப்போது அவர் தனது அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பேசி வீடியோ ஒன்றை பதிவு செய்து இன்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.

வீடியோ காட்சியில் அவர் காரில் சீட் பெல்ட் அணியாதது தெரியவந்தது. பிரிட்டனில் மருத்துவ காரணங்களுக்காக விலக்கு பெற்றவர்களை தவிர மற்ற நபர்கள் அனைவரும் காரில் சீட் பெல்ட் அணிவது கட்டாயம். அப்படியிருக்க பிரதமரே சட்ட விதிகளை மீறி சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்கிறார் என்ற புகார் குவிந்தன.

இந்நிலையில், மறதியில் சிறிது தூரம் சீட் பெல்ட் அணியவில்லை என தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டு ரிஷி சுனக் விளக்கம் கொடுத்தார். இந்நிலையில், பிரதமரின் விதிமீறல் செயலுக்கு லாகன்ஷைர் காவல்துறை அபராதம் விதித்துள்ளது. எனவே, ரிஷி சுனாக் 100 பவுன்ட் தொகை அபராதமாக செலுத்த வேண்டும். இந்திய மதிப்பின் படி இது ரூ.10,000 ஆகும். ஒரு மாத காலத்திற்குள் அபராதத்தை செலுத்த வேண்டும் அல்லது நீதிமன்றத்தில் 500 பவுன்ட் அபராதம் செலுத்த வேண்டி வரும்.

ஏற்கனவே, 2020ஆம் ஆண்டில் கொரோனா லாக்டவுன் காலத்தில் அன்றைய பிரதமர் போரிஸ் ஜான்சன் விதிமுறையை மீறி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து அவர் நாடாளுமன்றத்தில் பகீரங்கமாக மன்னிப்பு கேட்டார். அன்று அமைச்சராக இருந்த ரிஷி சுனக்கும் அந்த பார்ட்டியில் பங்கேற்று புகாருக்கு ஆளானார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Britain, Car, Rishi Sunak