Home /News /international /

போலீசாரிடம் சிக்காமல் இருக்க கரடி பொம்மைக்குள் ஒளிந்து கொண்ட திருடன்.. அடுத்து நடந்தது?

போலீசாரிடம் சிக்காமல் இருக்க கரடி பொம்மைக்குள் ஒளிந்து கொண்ட திருடன்.. அடுத்து நடந்தது?

டெட்டி பியர் பொம்மைக்குள் ஒளிந்திருந்த கார் திருடன்

டெட்டி பியர் பொம்மைக்குள் ஒளிந்திருந்த கார் திருடன்

இந்த சுவாரசிய சம்பவத்தை மான்செஸ்டர் காவல்துறை தனது பேஸ்புக் பக்கத்தில் விரிவாக பகிர்ந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    பிரிட்டன் நாட்டில் கார் திருடன் ஒருவன் 5 அடி டெட்டி பியர் பொம்மையில் ஒளிந்திருந்த நிலையில், அவனை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

    உலகில் திருடர்கள் காவல்துறையிடம் இருந்து தப்பித்து செல்ல வித விதமான டெக்னீக்குகளை கையாள்வது உண்டு. அப்படித்தான் திருடன் ஒருவன் காவல்துறையிடம் இருந்து பொம்மைக்குள் ஒளிந்த போதும், வசமாக மாட்டியுள்ளார்.இது குறித்து பிரிட்டன் நாட்டின் மான்செஸ்டர் நகர காவல்துறை கூறியதாவது, அப்பகுதியைச் சேர்ந்த ஜோசுவா டாப்சன் என்ற 18 வயது இளைஞர் கார் ஒன்றை திருடியுள்ளார். அத்தோடு நிற்காமல் அந்த காருக்கு எரிவாயு நிரப்பி பங்கில் பணம் தரமால் தப்பி சென்றுள்ளார். இந்த சம்பவம் மே மாதத்தில் நடைபெற்ற நிலையில், கடந்த இரு மாதங்களாக இவரை சல்லடைப் போட்டு காவல்துறை தேடியுள்ளனர்.

    ஒரு வழியாக விசாரணையில் காவல்துறை ஜோசுவாவின் வீட்டின் முகவரியை தேடி கண்டுபிடித்துள்ளனர். பின்னர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டில் யாரும் இல்லாமல் ஆள் அரவம் இன்றி இருந்துள்ளது.வீட்டின் பொருள்களை தூலாவி சோதனை மேற்கொண்ட போது தான் வீட்டில் இருந்த சுமார் ஐந்தடி டெட்டி பியர் பொம்மை விசித்திரமாக இருந்ததை காவல்துறையினர் கவனித்துள்ளனர். இந்த பொம்மை மூச்சு விடுவது போல அவர்களுக்கு தோன்றியதால் அந்த பொம்மையை சோதனையிட்ட பார்த்துள்ளனர்.

    அப்போது தான் அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், 6 அடி உயரம் கொண்ட ஜோசுவா இந்த 5 அடி டெட்டி பியரில் ஒளிந்து இருந்தது தெரியவந்துள்ளது.

    இதையும் படிங்க: வரலாறு காணாத வறட்சியில் சிக்கி தவிக்கும் பிரிட்டன்.. புகழ்பெற்ற தேம்ஸ் நதி வறண்டது!

    உடனடியாக அந்த டெட்டி பியர் பொம்மையை கிழித்து ஜோசுவாவை பிடித்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தற்போது பொம்மைக்குள் ஒளிந்திருந்த அந்த திருடன் ஜோசுவா சிறைக்குள் இருந்து கம்பி எண்ணுவதாக மான்செஸ்டர் காவல்துறை இந்த சம்பவத்தை பேஸ்புக்கில் பதிவிட்டு பகிர்ந்துள்ளது. இந்த பேஸ்புக் பதிவுக்கு சுமார் 3,000 ரியாக்ஷன்களும், 500 கமென்டுகளும், 500 ஷேர்களும் இதுவரை கிடைத்துள்ளன.
    Published by:Kannan V
    First published:

    Tags: Britain, Thief

    அடுத்த செய்தி