ஹோம் /நியூஸ் /உலகம் /

நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி! பிரிட்டன் பிரதமராகத் தொடர்கிறார் தெரசா மே

நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி! பிரிட்டன் பிரதமராகத் தொடர்கிறார் தெரசா மே

பிரிட்டன் பிரதமர் தெரசா மே

பிரிட்டன் பிரதமர் தெரசா மே

பிரிட்டன் நாடாளுமன்ற கீழ் சபையில் பிரெக்ஸிட் மீதான வாக்கெடுப்பில் 432 எதிர்ப்புத் தெரிவித்து வாக்களித்துள்ளனர். வெறும் 202 பேர் மட்டும் தான் ஆதரவளித்தனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

பிரிட்டன் பிரதமர் தெரசா மேவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியில் முடிந்தது.

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேற முடிவு செய்து அதற்கானத் திட்டத்தையும் பிரதமர் தெரேசா மே முன்வைத்தார். கடந்த 2016-ம் ஆண்டு பிரெக்ஸிட் தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, பிரிட்டன் வெளியேற்றத்துக்கு மக்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

இதன் அடிப்படையில் இந்தாண்டு வருகிற மார்ச் 29-ம் தேதி பிரிட்டன், ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேற வேண்டிய நாள். ஆனால், பிரிட்டன் நாடாளுமன்ற கீழ் சபையில் பிரெக்ஸிட் மீதான வாக்கெடுப்பில் 432 எதிர்ப்புத் தெரிவித்து வாக்களித்துள்ளனர். வெறும் 202 பேர் மட்டும் தான் ஆதரவளித்தனர்.

இதனால், பிரிட்டன் வெளியேற்றம் கேள்விக்குறியாகியது. இதையடுத்து தெரேசா மே மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவர் ஜெரேமி கார்பைன் கொண்டு வந்தார்.

இந்நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பாராளுமன்றத்தில் விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற்றது. வாக்கெடுப்பின் முடிவில் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பிரதமர் தெரசா மேக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியில் முடிந்நது.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாக 306 பேரும் எதிராக 325 பேரும் வாக்களித்ததால் தெரசா மே அரசு தப்பியது. பிரெக்ஸிட் குறித்து தெரிவித்த பிரிட்டன் பிரதமர் தெரசா மே, ‘எம்.பிக்கள் அவர்களுடைய சொந்த விருப்பங்களை மனதிற்குள் வைத்துக் கொள்ள வேண்டும். பிரெக்ஸிட் விவகாரத்தில் அனைவரும் இணைந்து செயல்படவேண்டும்’ என்று தெரிவித்தார்.

Also see:

First published:

Tags: BREXIT