ஹோம் /நியூஸ் /உலகம் /

பிரெக்சிட் ஒப்பந்தத்துக்கான மாற்றுத் திட்டம் - பிரிட்டன் பிரதமர் தெரசா மே அறிவிப்பு

பிரெக்சிட் ஒப்பந்தத்துக்கான மாற்றுத் திட்டம் - பிரிட்டன் பிரதமர் தெரசா மே அறிவிப்பு

பிரதமர் தெரசா மே

பிரதமர் தெரசா மே

மார்ச் 30-க்குப் பிறகும், பிரிட்டனில் தங்கியிருக்க விரும்பும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு விண்ணப்பக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான ஒப்பந்தத்தில் திருத்தங்களை செய்து மாற்றுத் திட்டத்தை பிரதமர் தெரசா மே அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து மார்ச் 29-ம் தேதியுடன் வெளியேறுவதாக பிரிட்டன் அறிவித்துள்ளது. இதற்காக ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரிட்டன் அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

ஆனால், இந்த ஒப்பந்தத்தை பிரிட்டன் நாடாளுமன்றம் கடந்த வாரத்தில் நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து, தெரசா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இதில், பிரதமர் தெரசா மே வெற்றிபெற்றார். இந்நிலையில், பிரெக்சிட் ஒப்பந்தத்துக்கான மாற்றுத் திட்டத்தை பிரதமர் நேற்று அறிவித்துள்ளது.

இதன்படி, மார்ச் 30-க்குப் பிறகும், பிரிட்டனில் தங்கியிருக்க விரும்பும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு விண்ணப்பக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல, அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று சில திருத்தங்களை அவர் அறிவித்துள்ளார். இரண்டாவது பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை தெரசா மே நிராகரித்தார்.

மேலும், மார்ச் 29-ம் தேதியுடன் வெளியேறாவிட்டால், பொது வாக்கெடுப்பில் மக்கள் தெரிவித்த விருப்பத்துக்கு மாறானதாக அமைந்துவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Also see...

First published:

Tags: BREXIT