ஹோம் /நியூஸ் /உலகம் /

பிரிட்டன் பொருளாதாரத்தை மேம்படுத்துவதே இலக்கு.! - ரிஷி சுனக்

பிரிட்டன் பொருளாதாரத்தை மேம்படுத்துவதே இலக்கு.! - ரிஷி சுனக்

ரிஷி சுனக்

ரிஷி சுனக்

Rishi sunak : நாட்டின் வளர்ச்சிக்காக முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ் நடவடிக்கை எடுத்தாலும், அதில் சில தவறுகள் இருந்ததாகவும் ரிஷி கூறினார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • iNTER, IndiaUnited Kingdom

  பிரிட்டன் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் அதிகாரபூர்வமாக பொறுப்பேற்றார். பிரிட்டன் பொருளாதாரத்தை மேம்படுத்துவதே தனது அரசின் இலக்கு என சுனக் தெரிவித்துள்ளார்.

  பிரிட்டனில் கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமர் பதவியில் இருந்து கடந்த ஜூலை 7ம் தேதி போரிஸ் ஜான்சன் விலகினார். இதைத் தொடர்ந்து பிரதமராக பதவியேற்ற லிஸ் டிரஸ் 45 நாட்களில், பதவியை ராஜினாமா செய்தார்.

  இதைத் தொடர்ந்து ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் மற்றும் பிரதமர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்-கும் நாடாளுமன்ற மக்கள் சபையின் தலைவர் பென்னி மார்டண்ட்-க்கும் நேரடி போட்டி ஏற்பட்டது. இதில் ரிஷிக்கு 193 எம்பிக்கள் ஆதரவு தெரிவித்ததால், பிரதமர் பதவி போட்டியில் இருந்து விலகுவதாக பென்னி மார்டண்ட் அறிவித்தார்.

  இதைத்தொடர்ந்து கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ரிஷி, மன்னர் 3ம் சார்லஸை சந்தித்தார். இந்நிலையில், ரிஷி சுனக்கை நாட்டின் 57வது பிரதமராக நியமிப்பதாக மன்னர் சார்லஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பின்னர் பிரதமர் இல்லத்தின் முன் செய்தியாளர்களிடம் பேசிய ரிஷி சுனக், ஒருமைப்பாடு, தொழில் வளர்ச்சியில் தனது தலைமையிலான அரசு கவனம் செலுத்தும் என்றும், பொருளாதாரத்தை மேம்படுத்த சில கடினமான முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கூறினார். நாட்டின் வளர்ச்சிக்காக முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ் நடவடிக்கை எடுத்தாலும், அதில் சில தவறுகள் இருந்ததாகவும் ரிஷி கூறினார்.

  Also Read:  பிரிட்டன் பிரதமரானார் இந்திய வம்சாவளி ரிஷி சுனக்!

  சுனக்கின் மாமனாரும், இன்ஃபோசிஸ் இணை நிறுவனருமான நாராயண மூர்த்தி, அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  "ரிஷி குறித்த தாங்கள் பெருமை படுவதாகவும், இங்கிலாந்து மக்களுக்கு அவர் தன்னாலான அனைத்து நன்மைகளையும் செய்வார் என்றும் நாராயண மூர்த்தி கூறியுள்ளார். இதேபோல் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்களும் ரிஷிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Prime minister, Rishi Sunak, Tamil News