ஹோம் /நியூஸ் /உலகம் /

3,000 இந்திய இளைஞர்களுக்கு விசா வழங்கப்படும்.. பிரதமர் மோடி சந்தித்த கையோடு பிரிட்டன் பிரதமர் அறிவிப்பு

3,000 இந்திய இளைஞர்களுக்கு விசா வழங்கப்படும்.. பிரதமர் மோடி சந்தித்த கையோடு பிரிட்டன் பிரதமர் அறிவிப்பு

பிரிட்டன் பிரதமர் ரிஷி உடன் பிரதமர் மோடி

பிரிட்டன் பிரதமர் ரிஷி உடன் பிரதமர் மோடி

இந்தியாவைச் சேர்ந்த 18-30 வயது பட்டதாரிகள் இளைஞர்கள் 3,000 பேருக்கு பிரிட்டனில் தங்கி இரண்டாண்டுகள் பணிபுரியும் வாய்ப்பை அந்நாட்டு அரசு வழங்குவதாக பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • intern, IndiaLondonLondonLondon

  2022 ஜி-20 உச்ச மாநாடு இந்தோனேசியாவின் பாலி தீவில் நவம்பர் 15-16 தேதிகளில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் உலக நாடுகளின் முன்னணி தலைவர்களான பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உள்பட நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்று உரையாடினர்.

  இந்த நிகழ்வின் போது பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமர் ரிஷி சுனக் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் கடந்த மாதம் பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் பிரதமர் மோடியை நேரில் சந்திப்பது இதுவே முதல் முறை. இந்த சந்திப்பு நடைபெற்ற சில மணிநேரங்களிலேயே இரு நாட்டின் உறவை வலுப்படுத்தும் விதமாக முக்கிய அறிவிப்பை ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.

  அதன்படி, இந்தியா-பிரிட்டன் வேலை திட்டத்தின் கீழ் இந்தியாவைச் சேர்ந்த 18-30 வயது பட்டதாரிகள் இளைஞர்கள் 3,000 பேருக்கு இங்கிலாந்தில் இரண்டாண்டுகள் விசாவில் தங்கி பணிபுரியும் வாய்ப்பை பிரிட்டன் அரசு வழங்குவதாக பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இரு நாட்டின் உறவு வலுப்பெற்று, இரு நாடுகளின் பொருளாதாரம் மேம்படும்.

  இந்த திட்டத்தின் கீழ் இந்தியாவின் ஆற்றல் மிக்க இளைஞர்கள் பிரிட்டன் நாட்டில் தங்கள் திறமையும் அனுபவத்தையும் நன்கு பயன்படுத்துவார்கள் என நம்புகிறேன் என அவர் கூறியுள்ளார்.

  இதையும் படிங்க: ' நீங்க சரியில்லை' கனடா பிரதமரை திட்டிய சீன அதிபர்.. வீடியோ லீக் ஆனதால் பரபரப்பு!

  பிரிட்டன் நாட்டில் பயிலும் கால்வாசி வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் தான். இந்தியர்களின் முதலீடு மூலம் அந்நாட்டில் 95,000 வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், இரு நாடுகளுக்கு இடையே முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தக ஒப்பந்தத்தை முடிவு செய்து நடைமுறைபடுத்த இந்தியாவும் பிரிட்டனும் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன.

  Published by:Kannan V
  First published:

  Tags: Rishi Sunak, UK