Home /News /international /

57-வது வயதில் 6-வது குழந்தைக்கு தந்தையானார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

57-வது வயதில் 6-வது குழந்தைக்கு தந்தையானார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

திருமணத்திற்கு முன்பாகவே போரிஸ் - கேரி ஜோடிக்கு 2020 ஏப்ரலில் மகன் பிறந்திருந்தார். கடந்த மே மாதம் போரிஸ் ஜான்சனும், கேரியும் கத்தோலிக்க முறைப்படி எளிமையாக திருமணம் முடித்துக் கொண்டனர்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் - கேரி தம்பதிக்கு 2-வது பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த போரிஸ் ஜான்சன், கடந்த 2019 ஜூலையில் பிரிட்டன் பிரதமராக பொறுப்புக்கு வந்தார். அவர் அதற்கு முன்பாக பிரிட்டன் வெளியுறவு அமைச்சர், லண்டன் மேயர் உள்பட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

போரிஸ் ஜான்சனின் முதல் மனைவி மோன்ஸ்டின் ஓவன் 1993-ல் காலமானார் .பின்னர் பிரபல வழக்கறிஞர் மரினா வீலரை 1993-ல் திருமணம் செய்து கொண்டார். இந்த இணை 2020-ல் விவாகரத்து பெற்றது.

Also Read : விதிகளை மீறி போட்டி நிறுவனங்களுக்கு இழப்பை ஏற்படுத்தியதாக புகார்... அமேசானுக்கு ரூ.10 ஆயிரம் கோடி அபராதம் விதிப்பு

இதற்கிடையே, 2019 இறுதியில், தனக்கும் அரசியல் செயற்பாட்டாளர் கேரிக்கும் இடையே நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாக போரிஸ் ஜான்சன் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். திருமணத்திற்கு முன்பாகவே இந்த ஜோடிக்கு 2020 ஏப்ரலில் மகன் பிறந்தார். கடந்த மே மாதம் போரிஸ் ஜான்சனும், கேரியும் கத்தோலிக்க முறைப்படி எளிமையாக திருமணம் முடித்துக் கொண்டனர்.

இந்நிலையில் போரிஸ் - கேரி தம்பதிக்கு லண்டன் தேசிய அரசு மருத்துவமனையில் 2வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. ஒமைக்ரான் வைரஸ் பிரிட்டனில் பரவி வருவதால், ஜான்சன் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார். அவர் கொரோனா வைரஸ் பரவலையும் சரியாக கையாளவில்லை என்று எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். இந்த சூழலில், அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் நடந்திருக்கிறது. தாயும், சேயும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read : விண்வெளி ஆய்வகத்திலிருந்து மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு.. சீனா புதிய மைல்கல்

பிரிட்டன் பிரதமருக்கு எத்தனை குழந்தைகள் என்ற யூகம் பல ஆண்டுகளாக மக்கள் மத்தியில் ஓடிக் கொண்டிருந்தது. இதுதொடர்பாக கடந்த செப்டம்பரில் நடந்த நேர்காணலின்போது பதில் அளித்த போரிஸ் ஜான்சன், மொத்தம் தனக்கு 6 குழந்தைகள் இருப்பதாக கூறினார்.
Published by:Musthak
First published:

Tags: Boris johnson

அடுத்த செய்தி