Home /News /international /

லாக்டவுன் விதிமுறை மீறி பார்டி - நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்கும் பிரமதர் போரிஸ் ஜான்சன்

லாக்டவுன் விதிமுறை மீறி பார்டி - நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்கும் பிரமதர் போரிஸ் ஜான்சன்

போரிஸ் ஜான்சன்

போரிஸ் ஜான்சன்

லாக்டவுன் விதிமுறையை மீறி பாட்டியில் பங்கேற்ற விவகாரத்தில் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கேட்க உள்ள என அரசு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    பிரிட்டன் நாட்டில் கோவிட்-19 லாக்டவுன் அமலில் இருந்த போது, விதிமுறைகளை மீறி அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன், சான்செலர் ரிஷி சுனாக் ஆகியோர் பார்டியில் பங்கேற்றது பெரும் சர்ச்சையை கிளப்பியது. விதிமுறையை மீறியதால் அந்நாட்டு காவல்துறை இருவருக்கும் அபராதம் விதித்து அதிரடி உத்தரவிட்டது.

    அந்நாட்டின் டவுனிங் ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற பார்ட்டியில் பிரதமர் போரிஸ் ஜான்சன், சான்செலர் ரிஷி ஆகியோர் பங்கேற்றதாகவும் இந்த விதிமீறிலில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டதாக காவல்துறை தரப்பு தெரிவித்தது. இந்த நிகழ்வைத் தொடர்ந்து அந்நாட்டு எதிர்க்கட்சியினர் பிரதமர் போரிஸ் ஜான்சனை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர்.

    இந்த சம்பத்திற்கு எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவர் கேர் ஸ்டார்மெர் "இருவரும் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். இவர்கள் ஆட்சி நடத்த முற்றிலும் தகுதியற்றவர்கள். பிரிட்டன் குடிமக்கள் இதை விட நல்ல தலைவர்களுக்கு தகுதி வாய்ந்தவர்கள். இவர்கள் இருவரும் மக்களிடம் தொடர்ந்து பொய் பேசி விதிமீறல்களை சகஜமாக செய்துவருகின்றனர்.

    சீரழிவை நோக்கி பயணிக்கும் இந்த அரசு நாட்டின் நடக்கும் சீரழிவை கண்டு கொள்வதில்லை" என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். எதிர்க்கட்சியின் தொடர் அழுத்தம் காரணமாக போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்கவுள்ளாக தகவல் வெளியாகியுள்ளது. இதை அரசு தரப்பு அதிகாரி உறுதிபடுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் உக்ரைன் போர் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து போரிஸ் உரையாற்றவுள்ளார்.

    இதையும் படிங்க:  மாதம் ரூ.7.63 லட்சம் வருமானம் கிடைத்தாலும் போதாது என்று சொன்ன டிக் டாக் யூசர் - வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

    சமீப காலமாகவே போரிஸ் ஜான்சன் தனது சொந்த கட்சி உறுப்பினர்களிடையே கடும் எதிர்ப்பை சந்தித்துவருகிறார். ஒரு கட்டத்தில் சுமார் 20-30 எம்.பிக்கள் தங்கள் கட்சியைச் சேர்ந்த பிரதமருக்கு எதிராகவே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர முயற்சி செய்தனர்.ஆனால், எதிர்பாராத விதமாக உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதல் நடத்தியதால், போரிஸ் ஜான்சன் இந்த சிக்கலில் இருந்து தற்காலிகமாக தப்பினார்..

    தற்போது மீண்டும்  இந்த பசர்ச்சையால் போரிஸ் ஜான்சனின் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தற்போது லாக்டவுனில் பார்டி செய்த சம்பவமும் சொந்த கட்சியினர் மட்டுமல்லாது பொது மக்களிடமும் போரிசுக்கு அதிருப்தியை உருவாக்கியுள்ளதாக அந்நாட்டின் ஊடக கருத்துகணிப்புகள் தெரிவிக்கின்றன. அடுத்த வாரம் மூன்று நாள் சுற்றுப் பயணமாக போரிஸ் ஜான்சன் இந்தியா வருகிறார். இந்த பயணத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் குஜராத் செல்லும் போரிஸ் பல்வேறு தொழில் திட்ட ஒப்பந்தங்களுக்கு கையெழுத்திட உள்ளார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Boris johnson

    அடுத்த செய்தி