இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு 33 வயது பெண்ணுடன் ரகசிய திருமணம்!

கேரி சைமண்ட்ஸ் உடன் போரிஸ் ஜான்சன்

கடந்த ஆண்டு ஏப்ரலில் போரிஸ் ஜான்சனுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

  • Share this:
56 வயதாகும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும், அவருடைய 33 வயது காதலிக்கும் தேவாலயத்தில் ரகசிய திருமணம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், கேரி சைமண்ட்ஸ் எனும் 33 வயது பெண்ணை காதலித்து வந்தார். அவருடன் திருமணம் செய்து கொள்ளாமலே இணைந்து (லிவ்விங் டூ கெதர்) வாழ்ந்து வந்தார். இந்நிலையில் லண்டனின் வெஸ்ட்மினிஸ்டரில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் நீண்ட நாள் காதலி கேரி சைமண்ட்ஸை, போரிஸ் ஜான்சன் ரகசியமாக திருமணம் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய லண்டனில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்ற இத்திருமணத்தில் கலந்து கொண்டோருக்கு கடைசி நேரத்தில் தான் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், பிரதமர் அலுவலகத்தின் மூத்த அதிகாரிகளுக்கு கூட இந்த திருமண வைபவம் குறித்து தெரிந்திருக்கவில்லை என்று லண்டனில் இருந்து வெளிவரும் ‘தி சன்’ மற்றும் ‘மெயில்’ பத்ரிகைகளில் செய்தி வெளியாகி இருக்கிறது.

தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இங்கிலாந்தில் கடும் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. திருமண நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 30 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நாளிதழ்களில் வெளியாகி இருக்கும் செய்தியின் அடிப்படையில், திருமணம் நடைபெற்ற வெஸ்ட்மினிஸ்டரில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தின் கதவுகள் 1.30 மணிக்கு மூடப்பட்டதாகவும், மணமகள் சைமண்ட்ஸ் அரைமணி நேரத்திற்கு பிறகு லிமோசின் காரில் நீண்ட வெள்ளை கவுனில் வந்தடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

Read More:   கொரோனாவை குணப்படுத்தும் ஆந்திர ஆயுர்வேத மருத்துவரின் ‘அதிசய’ மூலிகை மருந்து!

எனினும் இந்த திருமணம் குறித்து இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வ தகவல் எதையும் வெளியிடவில்லை.

2019ம் ஆண்டு போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவியேற்றது முதல் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான 10 டவுனிங் ஸ்ட்ரீட்டில், சைமண்ட்ஸும், போரிஸ் ஜான்சனும் இணைந்தே வாழ்ந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More:   ஆர்டர் செய்த சிக்கன் பிரியாணியில் லெக் பீஸ் இல்லை என அமைச்சரிடம் புகார் கூறிய இளைஞர்!

கடந்த ஆண்டு இருவருக்கும் திருமண நிச்சயம் ஆகியிருப்பதாகவும், குழந்தை பிறப்பதை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் இருவரும் கூறினர். இதனையடுத்து கடந்த ஆண்டு ஏப்ரலில் போரிஸ் ஜான்சனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு வில்ஃபிரெட் லாவ்ரி நிகோலஸ் ஜான்சன் எனவும் பெயரிட்டுள்ளனர்.

போரிஸ் ஜான்சனுக்கு இரு முறை விவாகரத்து ஆகியிருப்பதாகவும், கடைசியாக 2018ம் ஆண்டு மெரினா வீலர் என்ற பெண் வழக்கறிஞரை, போரிஸ் விவாகரத்து செய்தார். அவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளன.

போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி எதிர்கட்சியாக இருந்த போது, திருமணத்தை கடந்த பந்தம் குறித்து மறைத்ததாக கட்சி விதிகளின்படி போரிஸ் ஜான்சன் கட்சியிலிருந்து சில காலம் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: